Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மாநகராட்சி தங்குமிடத்தில் அடைக்கலமாவோர் அதிகரிப்பு

மாநகராட்சி தங்குமிடத்தில் அடைக்கலமாவோர் அதிகரிப்பு

மாநகராட்சி தங்குமிடத்தில் அடைக்கலமாவோர் அதிகரிப்பு

மாநகராட்சி தங்குமிடத்தில் அடைக்கலமாவோர் அதிகரிப்பு

ADDED : ஜூலை 27, 2011 12:57 AM


Google News
ஈரோடு : ஈரோடு மாநகராட்சி சார்பில் இயங்கும், இரவு நேர தங்குமிடத்தில், அடைக்கலம் தேடுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் 10 மாநகராட்சிகள், 21 மாவட்ட தலைநகரிலுள்ள நகராட்சிகள், உதகை, கொடைக்கானல் உள்பட 23 நகராட்சிகளில், சாலையோரம் வசிப்பவர்களுக்கான இரவு நேர தங்குமிடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், ஈரோடு மாநகராட்சி லக்காபுரத்தில், 30 லட்சம் ரூபாய் செலவில், இரவு நேர தங்குமிடம் கட்டி முடிக்கப்பட்டது. இம்மையம் ஜூன் 24ம் தேதி திறக்கப்பட்டது. வெளியூரைச் சேர்ந்த ஆண், பெண் கூலித் தொழிலாளர்கள், வீடின்றி தவிக்கும் சிறுவர்கள், மாற்றுத் திறனுடைய குழந்தைகள் ஆகியோர் இங்கு இரவு தங்கலாம். இவர்களுக்கு காலையும், இரவும் மட்டும் இலவச உணவு வழங்கப்படுகிறது. முதல்கட்டமாக இரவு நேரங்களில் வீடில்லாமல் சாலையோரம் வசித்த போது கண்டறியப்பட்ட 43 ஆண்கள், ஏழு பெண்கள், ஆறு குழந்தைகள் மையத்தில் தங்க வைக்கப்பட்டனர். இவர்களுக்கு தொண்டு நிறுவனம் ஒன்றின் உதவியுடன் இலவசமாக தலையணை, பெட்ஷீட் வழங்கப்பட்டது. இலவச உணவு வழங்க, 'செயின்ட் ஜோசப் சாரிடபிள் டிரஸ்ட்' என்ற அமைப்புக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஒரு வேளை உணவுக்கு பெரியவர்களுக்கு 10 ரூபாய், குழந்தைகளுக்கு ஐந்து ரூபாய் அந்த அறக்கட்டளைக்கு வழங்கப்படுகிறது. மையத்தில் 100 பேர் வரை தங்க வசதியுள்ளது. தகுதியானோர் வந்தால் மேலும் தங்க அனுமதியளிக்கப்படும் என, மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தது. ஓரிரு வாரங்களாக மையத்தில் தங்குவோர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது, மையத்தில் 46 ஆண்கள், 18 பெண்கள், ஆறு குழந்தைகள் உள்பட 67 பேர் தங்குகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us