/உள்ளூர் செய்திகள்/கடலூர்/அண்ணாமலைப் பல்கலை வேதியியல் துறையில் ரூ.1.25 கோடியில் மின்காந்த நிறைமானிஅண்ணாமலைப் பல்கலை வேதியியல் துறையில் ரூ.1.25 கோடியில் மின்காந்த நிறைமானி
அண்ணாமலைப் பல்கலை வேதியியல் துறையில் ரூ.1.25 கோடியில் மின்காந்த நிறைமானி
அண்ணாமலைப் பல்கலை வேதியியல் துறையில் ரூ.1.25 கோடியில் மின்காந்த நிறைமானி
அண்ணாமலைப் பல்கலை வேதியியல் துறையில் ரூ.1.25 கோடியில் மின்காந்த நிறைமானி
ADDED : அக் 06, 2011 01:17 AM
சிதம்பரம் : அண்ணாமலைப் பல்கலைக்கழக வேதியியல் துறையில் ஒரு கோடியே 25
லட்சம் ரூபாய் செலவில் மின்காந்த உட்கரு உடனிசை நிறைமானி வழங்கப்பட்டு
துவக்கி வைக்கப்பட்டது.
அண்ணாமலைப் பல்கலைக் கழக வேதியியல் துறைக்கு இந்திய
அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தினால் 2 கோடி ரூபாய் ஐந்தாண்டு
ஆராய்ச்சி பணிக்கு 1 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் மின்காந்த உட்கரு
உடனிசை நிறைமானி வழங்கப்பட்டது. துணைவேந்தர் ராமநாதன் துவக்கி வைத்து,
அருகில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், ஆராய்ச்சி
மாணவர்கள், பட்டப்படிப்பு மாணவர்கள் இதன் மூலம் பயன்பெறுவார்கள் என
தெரிவித்தார். விழாவில் பதிவாளர் ரத்தினசபாபதி முன்னிலை வகித்தார். பல்கலை
புல முதல்வர்கள் பயனியப்பன், கண்ணன், விஸ்வநாதன், பாலசுப்ரமணியன், ஆட்சி
மன்ற உறுப்பினர் சிவக்குமார், தொலைதூர கல்வி இயக்குனர் நாகேஸ்வர ராவ்
பங்கேற்றனர். வேதியியல் துறைத் தலைவர் கருணாகரன் நன்றி கூறினார்.


