ADDED : அக் 06, 2011 09:40 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அடுத்த கொழிஞ்சாம்பாறை காக்கரைபதி அம்மன் கோவில்
பாலம் திறப்பு விழா நடந்தது.
பொள்ளாச்சி அடுத்த கொழிஞ்சாம்பாறை
கோரையாற்றின் மறுக்கரையில், பழநியார்பாளையம், பள்ளிக்குடத்தானூர்,
குலுக்கபாறை, தினைக்குளம் பகுதிகளில் 800 குடும்பங்கள் வசிக்கின்றன.
இங்குள்ள மக்கள் இப்பாலம் வழியாக மறுக்கரையை அடைகின்றனர். ஆற்றில், நீர்
பெருக்கு ஏற்படும் போது கொழிஞ்சாம்பாறை அரசு மருத்துவமனை, பள்ளி, கல்லூரி,
அரசு அலுவலகங்களுக்கு செல்ல முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
இதனால், ஐந்து கி.மீ., தூரம் சுற்றி கொழிஞ்சாம்பாறையை வந்தனர். இதை
தவிர்க்க, புதிய பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கை
விடுத்து வந்தனர். அதற்கேற்ப தற்போது எம்.பி., தொகுதி வளர்ச்சி நிதி மூலம்
ஒன்றரை கி.மீ., தூரம் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு
விழாவில், கேரள மாநில தமிழ் பாதுகாப்பு இயக்க பொது செயலாளர் பேச்சிமுத்து
வரவேற்றார். சித்தூர் ஒன்றிய தலைவர் கோபாலசாமி தலைமை வகித்தார். வட்டார
வளர்ச்சி அலுவலர் வாசுதேவன் அறிக்கை வாசித்தார். இதில், காக்கரைபதி அம்மன்
கோவில் புதிய நடைவழி பாலத்தை எம்.பி., இஸ்மாயில் திறந்து வைத்து பேசினார்.
ஒன்றிய, ஊராட்சி உறுப்பினர்கள் உட்பட பலர் விழாவில் பங்கேற்றனர்.


