ADDED : செப் 21, 2011 01:05 AM
கோவில்பட்டி:கோவில்பட்டி செயிண்ட் ஆண்ட்ரூஸ் மெட்ரிக் பள்ளியில் சர்வதேச
ஓசோன் தினம் கொண்டாடப்பட்டது.பள்ளித்தாளாளர் ஆண்ட்ரூஸ் சாம்ராஜ் தலைமை
வகித்தார்.
என்சிசி., பொறுப்பாசிரியர் சுப்பிரமணியன் வரவேற்றார். மாணவ,
மாணவிகள் கருத்தரங்கில் ஓசோன் நன்மைகள் அதை பாதிக்கும் காரணிகள் குறித்து
பேசினர். ஆசிரியை ஜெயந்தி நன்றிகூறினார். ஏற்பாடுகளை ஆசிரியைகள்
செய்திருந்தனர்.