/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/இலவச ஆடை தயாரிப்பு பயிற்சி நிப்ட் - டீ தருகிறதுஇலவச ஆடை தயாரிப்பு பயிற்சி நிப்ட் - டீ தருகிறது
இலவச ஆடை தயாரிப்பு பயிற்சி நிப்ட் - டீ தருகிறது
இலவச ஆடை தயாரிப்பு பயிற்சி நிப்ட் - டீ தருகிறது
இலவச ஆடை தயாரிப்பு பயிற்சி நிப்ட் - டீ தருகிறது
ADDED : ஆக 14, 2011 03:06 AM
திருப்பூர் : நிப்ட் - டீ பேஷன் கல்லூரியில், இலவசமாக ஆடை தயாரிப்பு
தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது.கல்லூரி முதல்வர் கோகர்நேசன்
அறிக்கை:திருப்பூர் சிட்கோ முதலிபாளையத்தில் உள்ள நிப்ட்-டீ பேஷன்
கல்லூரியில், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள வேலையில்லா இளைஞர்களுக்கு ஆடை
தயாரிப்பு குறித்த குறுகிய கால தொழிற்பயிற்சி வகுப்பு இலவசமாக
வழங்கப்படுகிறது.
கிராமப்புற வேலையில்லாத இளைஞர்களை தேர்வு செய்யும்
வகையில், கல்லூரி 'அபெக்ஸ் கிளஸ்டர் டெவலப் மெண்ட் சர்வீசஸ்' நிறுவனத்துடன்
இணைந்து நடமாடும் ஊர்தி மூலம் விழிப்புணர்வு முகாம் நடத்துகிறது;பயிற்சி
பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு உதவி, ஊக்கத்தொகை மற்றும் பயிற்சி நிறைவில்
சான்றிதழ் வழங்கப்படும், என தெரிவித்துள்ளார்.