Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/இலங்கை தமிழர் முகாமில் முதன்மை செயலர் ஆய்வு

இலங்கை தமிழர் முகாமில் முதன்மை செயலர் ஆய்வு

இலங்கை தமிழர் முகாமில் முதன்மை செயலர் ஆய்வு

இலங்கை தமிழர் முகாமில் முதன்மை செயலர் ஆய்வு

ADDED : செப் 01, 2011 11:32 PM


Google News

திருச்சி: தமிழக அரசு மறுவாழ்வு மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை முதன்மை செயலர் மற்றும் கமிஷனர் தீனபந்து பயிற்சியை துவக்கி வைத்து இலங்கை தமிழர் முகாமில் ஆய்வு நடத்தினார்.

திருச்சி, கரூர்,பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர் மற்றும் நாமக்கல் ஆகிய ஆறு மாவட்டங்களிலுள்ள இலங்கை தமிழர் முகாம்களை பராமரிக்கும் வருவாய்த்துறை தாசில்தார்கள் மற்றும் ஆர்.ஐ.,களுக்கு மனித உரிமைகள் குறித்த இரண்டு நாள் பயிற்சி நடந்தது. இப்பயிற்சியை முதன்மை செயலாளர் துவக்கி வைத்தார்.



திருச்சியிலுள்ள இலங்கை தமிழர்கள் முகாமில் ஆய்வு நடத்தினார். முகாமில், வழங்கப்படும் ரேஷன் பொருள்கள் வழங்குவ குறித்தும் 20 கிலோ இலவச அரிசி வழங்குவது குறித்தும் கேட்டார். அங்குள்ள இலங்கை தமிழர்கள் அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்பட்ட வேண்டும். குடிநீருக்கு காவிரி தண்ணீர் வழங்க வேண்டும் என கோரினர். இவர்களது கோரிக்கையை நிறைவேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். முகாமில், தங்கியுள்ள தமிழர்களுக்கு முதல்வர் மாதாந்திர உதவி தொகை முறையாக வழங்கப்படுகிறதா? என முகாமில் தங்கியுள்ளவர்களிடம் கேட்டார். இந்நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., மாணிக்கம், தனித்துணை தாசில்தார் ராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us