/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/தண்ணீருக்காக 4 கி.மீ., நடக்கும் அவலம்தண்ணீருக்காக 4 கி.மீ., நடக்கும் அவலம்
தண்ணீருக்காக 4 கி.மீ., நடக்கும் அவலம்
தண்ணீருக்காக 4 கி.மீ., நடக்கும் அவலம்
தண்ணீருக்காக 4 கி.மீ., நடக்கும் அவலம்
ADDED : ஆக 25, 2011 11:30 PM
ராமநாதபுரம் : திருவாடானை அருகே குடிநீருக்காக 4 கி.மீ., நடக்க வேண்டிய அவலநிலையில் மக்கள் உள்ளனர்.
நல்லகடம்பன் ஊராட்சியை சேர்ந்த இந்திரா காலனியில் 300க்கும் மேற்பட்டோர்
வசித்து வருகின்றனர். தண்ணீருக்காக 2 கி.மீ., தொலைவில் உள்ள மருங்கூருக்கு
செல்கின்றனர். தெரு விளக்குகள் எரிவதில்லை. சுடுகாட்டிற்கு வயலை
தாண்டித்தான் செல்கின்றனர். இந்திரா காலனி பாண்டி மீனா கூறியதாவது: மயான
பாதைக்கு ஒரு லட்சம் நிதி ஒதுக்கியும், இதுவரை பணி நடக்கவில்லை. காவிரி
எங்களுக்கு, கானல் நீராக உள்ளது. அடிப்படை வசதிகள் செய்து தர ஊராட்சி
நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.