ஓட்டப்பிடாரத்தில் குற்றவியல் கோர்ட் அமைக்க நடவடிக்கை: செந்தமிழன்
ஓட்டப்பிடாரத்தில் குற்றவியல் கோர்ட் அமைக்க நடவடிக்கை: செந்தமிழன்
ஓட்டப்பிடாரத்தில் குற்றவியல் கோர்ட் அமைக்க நடவடிக்கை: செந்தமிழன்

''ஒட்டப்பிடாரத்தில் குற்றவியல் கோர்ட் அமைப்பதற்õகான செயற்குறிப்பு, ஐகோர்ட் தலைமைப் பதிவாளரிடமிருந்து பெறப்படும் முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெறும் பட்சத்தில், அத்திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று சட்டசபையில் அமைச்சர் செந்தமிழன் தெரிவித்தார்.
சட்டசபையில் நேற்று கேள்விநேரத்தின் போது, உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர்கள் அளித்த பதில்: ராமச்சந்திரன்-இந்திய கம்யூனிஸ்ட்: தளி தொகுதி பேவநத்தம் ஊராட்சி, பெரியபாலேகுளி அருகில் அணை கட்டும் திட்டம் அரசிடம் உள்ளதா?
அமைச்சர் கே.வி.ராமலிங்கம்: அணைக்கட்டும் திட்டம் தலைமைப் பொறியாளர், நீர்வள ஆதாரத்துறை திட்ட உருவாக்கத்தின் பரிசீலனையில் உள்ளது.
சோமசுந்தரம்-அ.தி.மு.க.,: காஞ்சிபுரம் மாவட்டம், செவிலிமேடு பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தினை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா?
அமைச்சர் கே.பி.முனுசாமி: பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
கிருஷ்ணசாமி- புதிய தமிழகம்: ஒட்டப்பிடராத்தில் குற்றவியல் கோர்ட் அமைக்க அரசுநடவடிக்கை எடுக்கப்படுமா?
அமைச்சர் செந்தமிழன்: ஒட்டப்பிடாரத்தில் குற்றவியல் கோர்ட் ஏற்படுத்துவது தொடர்பான செயற்குறிப்பு, சென்னை ஐகோர்ட் தலைமைப் பதிவாளரிடமிருந்து பெறப்படும் முன்னுரிமைப் பட்டியலில் இடம் பெறும் பட்சத்தில், இத்திட்டத்தை நிறைவேற்ற அரசு பரிசீலனை செய்து தக்க நடவடிக்கை எடுக்கும்.
கருப்பசாமி-அ.தி.மு.க.,: திருப்பூர் மாவட்டம் தெக்கலூர் ஊராட்சியில் ஜவுளி சந்தை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?
அமைச்சர் ரமணா: தெக்கலூர் ஊராட்சியில் தனியே ஒரு ஜவுளி சந்தை அமைக்க அப்பகுதி தொழில் முனைவோர்கள் முன்வந்தால் அரசின் உதவியுடன் ஜவுளி சந்தை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.