Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/தி.மு.க., இளைஞர் அணி சார்பில் கவிதை, கட்டுரை, பேச்சு போட்டி

தி.மு.க., இளைஞர் அணி சார்பில் கவிதை, கட்டுரை, பேச்சு போட்டி

தி.மு.க., இளைஞர் அணி சார்பில் கவிதை, கட்டுரை, பேச்சு போட்டி

தி.மு.க., இளைஞர் அணி சார்பில் கவிதை, கட்டுரை, பேச்சு போட்டி

ADDED : ஆக 26, 2011 01:06 AM


Google News
ஓசூர்: மாவட்ட தி.மு.க., இளைஞர் அணி சார்பில், அண்ணாதுரை பிறந்த நாளையொட்டி மாணவ, மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் கிருஷ்ணகிரியில் வரும் 27, 28ம் தேதிகளில் நடக்கிறது.

மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் யுவராஜ் வெளியிட்ட அறிக்கை: அண்ணாதுரை பிறந்த நாளையொட்டி தி.மு.க., இளைஞர் அணி சார்பில் ஒன்பதாம் வகுப்பு முதல் ப்ளஸ் 1 வரை மற்றும் ப்ளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் கிருஷ்ணகிரி- சேலம் சாலையில் உள்ள தமிழ்நாடு திருமண மண்டபத்தில், வரும் 27 மற்றும் 28ம் தேதிகளில் நடக்கிறது.போட்டிகளை மாவட்ட செயலாளர் செங்குட்டுவன், மாநில தி.மு.க., இளைஞர் அணி துணை செயலாளர் சுகவனம் ஆகியோர் துவக்கி வைக்கின்றனர். போட்டிகளுக்கு தலைமை நடுவராக குமரிதாமரை, செயல்படுவார். மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் தனசேகர், செந்தில், திருமலை செல்வம், நகர அமைப்பாளர் ராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். பேச்சு போட்டிக்கு 'அகிலமே வியக்கும் அண்ணாவும், கலைஞரும்' என்ற தலைப்பும், கட்டுரை போட்டி 'மாணவர்கள் நலனில் அண்ணாவும், கலைஞரும்', 'மொழிப்போரில் தி.மு.க.,' ஆகிய தலைப்புகளில் நடத்தப்படும். கவிதை போட்டியில், 'கலைஞரின் கவிதை', 'தமிழே, தேனே, தங்ககனியே' என துவங்கும் கவிதை படைப்புகள், 'புறநானூற்று தாய் பனிமூட்டை அடைகாக்கும்' என துவங்கும் கவிதைகள் இடம்பெறும்.வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல்பரிசாக, 10 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக, 5,000 ரூபாயும், மூன்றாம் பரிசு, 2,500, ஆறுதல் பரிசாக பத்து பேருக்கு, 1,000 ரூபாயும் வழங்கப்படும். மாவட்ட அளவில் இரு இடங்களில் வெற்றி பெறுவோர், மாநில அளவில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொள்ள அழைத்து செல்லப்படுவர். மாநில அளவில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு, 25 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசு, 15 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக, 10 ஆயிரம் ரூபாயும், ஆறுதல் பரிசாக, 5,000 ரூபாயும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை இளைஞர் அணி நகர அமைப்பாளர்கள் ஆர்.எஸ்.மணி, செந்தில்குமார், சுரேஷ், லியாகத், சிவா, குமார், ஒன்றிய அமைப்பாளர்கள் மஞ்சுநாதப்பா, சேகர், நாகராஜ், ராஜேந்திரன் ஆகியோர் செய்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us