/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/கிராமங்களுக்கு அருகில் ஓட்டுச்சாவடி தேர்தல் ஆணையம் உத்தரவுகிராமங்களுக்கு அருகில் ஓட்டுச்சாவடி தேர்தல் ஆணையம் உத்தரவு
கிராமங்களுக்கு அருகில் ஓட்டுச்சாவடி தேர்தல் ஆணையம் உத்தரவு
கிராமங்களுக்கு அருகில் ஓட்டுச்சாவடி தேர்தல் ஆணையம் உத்தரவு
கிராமங்களுக்கு அருகில் ஓட்டுச்சாவடி தேர்தல் ஆணையம் உத்தரவு
புதூர்:உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுச்சாவடிகள் கிராமத்திற்கு அருகிலேயே அமைக்குமாறு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.அக்டோபரில் உள்ளா ட்சி தேர்தல் நடக்கும் என அரசு திட்டவட்டமாக தெ ரிவித்து விட்டது.
ஓட்டுச்சாவடிதேர்தல் நடத்த தேவையான ஓட்டுச்சாவடிகள் போதிய வசதியுடன் இருக்க வேண்டும். வாக்கா ளர்கள் ஓட்டளிக்க வசதியாக கிராமத்தில் இருந்து 2 கி.மீ.,க்குள் ஓட்டுச்சாவடிகள் இருக்க வேண்டும். ஓட்டுச்சாவடிகள் தூரமாக இருப்பின், அவற்றை உட னே கிராமத்திற்கு அருகில் மாற்ற வேண்டும். பாகம் எண், ஆண், பெண் விபரத்தை தெளிவாக எழுதவேண்டும். மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் சென்றுவர ஏதுவாக வசதிகள் செய்யுமாறு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகையில், தேர்தல் அலுவலர்கள் ஓட்டுச்சாவடிக்கு செல்வதற்கான வரைபடம் உட்பட பல்வேறு நடவடிக்கைகளை பின்பற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதற்கான பணிகள் நடக்கிறது. இந்த முறை கிராம பஞ்.,ல் ஒரு வார்டு உறுப்பினருக்கான தேர்தல் என்பதால் ஓட்டு எண்ணும் பணி எளிதில் முடியும் என்றார். உள்ளாட்சி தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், கிராம, பஞ்.,யூனியன், மாவட்ட பஞ்.,கள் வாரியாக உள்ள வார்டுகள் விபரங்களை சேகரித்து, அனுப்பி வருகிறோம். இம்மாத இறுதிக்குள் இந்த விபரங்கள் சேகரிக்கப்படும். பின் மாநில தேர்தல் ஆணையம், வார்டு, வாரியாக வாக்காளர் பட்டியலை பிரித்து எங்களுக்கு வழங்கும் அந்த வாக்காளர் பட்டியல் படி உள்ளாட்சி தேர்தல் நடக்கும் என்றார்.