தங்கரத அறை சாவி மாயம்:3 ஊழியர் மீது நடவடிக்கை
தங்கரத அறை சாவி மாயம்:3 ஊழியர் மீது நடவடிக்கை
தங்கரத அறை சாவி மாயம்:3 ஊழியர் மீது நடவடிக்கை
ADDED : ஆக 21, 2011 02:05 AM
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், தங்க ரதம் அறையின் சாவி காணாமல் போன விவகாரத்தில், மூன்று ஊழியர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கோயில் துணை கமிஷனர் செந்தில் வேலவன் தெரிவித்தார்.
இரண்டாயிரம் ரூபாய் பணம் கட்டும் பக்தர்கள், கோயில் திருவாட்சி மண்டத்தை சுற்றி தங்கரதம் இழுக்க அனுமதிக்கப்படுகின்றனர். திருவாட்சி மண்டபத்திலிருந்தது, மடப்பள்ளி மண்டபம் செல்லும் வழியில் உள்ள அறையில் தங்கரதம் நிறுத்தப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் அந்த அறையின் சாவி காணாமல் போனதால், தங்க ரதம் புறப்பாடு தடை பட்டது. சாவி தொலைந்த விவகாரத்தில், பேஷ்கார் நாகராஜ், மணியம் நெடுஞ்
செழியன், காவலர் பாலமுருகன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாற்று சாவி மூலம் இன்று அறை திறக்கப்பட்டு, தங்க ரதம் புறப்பாடு நடக்கிறது.