/உள்ளூர் செய்திகள்/மதுரை/நவீன மருத்துவமனை :?14 வது வார்டு கமலவேணி உறுதிநவீன மருத்துவமனை :?14 வது வார்டு கமலவேணி உறுதி
நவீன மருத்துவமனை :?14 வது வார்டு கமலவேணி உறுதி
நவீன மருத்துவமனை :?14 வது வார்டு கமலவேணி உறுதி
நவீன மருத்துவமனை :?14 வது வார்டு கமலவேணி உறுதி
ADDED : அக் 02, 2011 12:58 AM
மதுரை : ''மதுரை மேலப்பொன்னகரம் இரண்டாவது தெருவில் உள்ள மாநகராட்சி மருத்துவமனையை, ஸ்கேன் வசதிகளுடன் கூடிய நவீன மருத்துவமனையாக மாற்றுவேன்,'' என, மாநகராட்சி 14வது வார்டு (மேலப்பொன்னகரம், ஞானஒளிவுபுரம்) தி.மு.க., வேட்பாளர் ஆர்.கமலவேணி உறுதியளித்தார்.
அவர் கூறியதாவது: 2001-06ல் மாநகராட்சி பழைய 26வது வார்டு தி.மு.க., கவுன்சிலராக இருந்தேன். என் குடும்பத்தினர் தொடர்ந்து 15 ஆண்டுகளாக கவுன்சிலராக இருந்துள்ளனர். அப்போது மெய்யப்பன் தெரு, மாநகராட்சி காலனியில் சிமென்ட் சாலை மற்றும் பேவர்பிளாக் சாலைகள் அமைக்கப்பட்டது. மேலப்பொன்னகரம் இரண்டாவது தெருவில் உள்ள மருத்துவமனையை, ஸ்கேன் வசதிகளுடன் கூடிய நவீன மருத்துவமனையாக மாற்றுவேன். வீடுபட்ட பகுதிகளில் வாய்க்கால் அமைக்கப்படும். கோமஸ்பாளையத்தில் வீடு கட்டும் பணி முடிக்கப்படும். பூங்காநகரில் சிமென்ட் கூரையை மாற்றி கான்கிரீட் அமைக்கப்படும். மேலப்பொன்னகரம் ஒன்று முதல் ஆறு வரை குறுக்கு தெருக்களுக்கு பேவர் பிளாக் ரோடு அமைக்கப்படும். 994 393 0766 ல் தொடர்பு கொண்டால் சேவையாற்ற 24 மணி நேரமும் தயாராக உள்ளேன் என்றார்.


