ADDED : செப் 12, 2011 02:16 AM
கரூர்: கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சீனிவாசன்
(40).
இவரது மகன் அன்பழகன் (11) அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில்
ஏழாம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த நான்காம் தேதி காலை 10 மணியளவில்
வீட்டை விட்டு வெளியே சென்ற அன்பழகன், நேற்று இரவு வரை வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து மாணவனின் தாயார் சிவகாமி போலீஸில் அளித்த புகாரின் பேரில்,
பசுபதிபாளையம் போலீஸார் மாணவரை தேடி வருகின்றனர்.