ADDED : ஆக 22, 2011 12:17 AM
திண்டிவனம் : திண்டிவனம் ஏழை மாரியம்மன் கோவிலில் மாவட்ட திருதொண்டர்
சலவைத் தொழிலாளர் முன்னேற்ற சங்க கூட்டம் நடந்தது.
சங்க மாவட்ட செயலாளர்
தினகரன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் வரதன் முன்னிலை வகித்தார்.மாவட்ட
தலைவர் அர்ச்சுனன், பொருளாளர் வெண்ணிமலை பேசினர். ஆறுமுகம், தென் சென்னை
மாவட்ட நிர்வாகிகள் மணவாளன், கோவிந்தன், சதீஷ் பாபு, குணசேகரன், மணி,
கர்ணா, மாரி உட்பட பலர் கலந்துக் கொண்டனர். ஏழை பெண் ஒருவருக்கு இலவச தையல்
இயந்திரம் வழங்கப்பட்டது. திண்டிவனம் வட்ட தலைவர் நகுலன் நன்றி கூறினார்.


