Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/தூத்துக்குடி மாநகராட்சியில் தேர்தல் பணி சுறுசுறுப்பு

தூத்துக்குடி மாநகராட்சியில் தேர்தல் பணி சுறுசுறுப்பு

தூத்துக்குடி மாநகராட்சியில் தேர்தல் பணி சுறுசுறுப்பு

தூத்துக்குடி மாநகராட்சியில் தேர்தல் பணி சுறுசுறுப்பு

ADDED : செப் 13, 2011 11:53 PM


Google News

தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சியில் தேர்தல் பணிகள் கடும் சுறுசுறுப்பை அடைந்துள்ளது.

தேர்தல் பிரிவு அலுவலகத்தில் 15க்கும் மேற்பட்ட ஆண், பெண் பணியாளர்கள் கம்ப்யூட்டரில் வாக்காளர் பட்டியல் தயாரித்தல் மற்றும் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 537 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இருப்பினும் இதில் மிக முக்கிய பதவியாக தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவி கருதப்படுகிறது. இதனால் இந்த பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேயர் பதவி யாருக்கு ஒதுக்கீடு என்பது குறித்த முறையான அறிவிப்பு நாø ள வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனால் இந்த அறிவிப்பு ஆர்வமாக மக்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இது ஒருபுறம் இருக்க தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஏற்பாடுகள் படு தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாக்குச்சாவடி இறுதி பட்டியல் வெளியாகி விட்ட நிலையில் வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளும் இன்னும் ஒரிரு நாளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந் நிலையில் தூத்துக்குடி மாநகராட்சியின் கடைசி கூட்டத்தை நாளை கூட்டுவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகிறது. கடைசி கூட்டம் என்பதால் அந்த கூட்டத்தில் தற்போது மேற்கொள்ள உள்ள ரோடு உள்ளிட்ட பணிகள் குறித்த தீர்மானத்தை நிறைவேற்றி முடிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது ஒருபுறம் இருக்க தூத்துக்குடி மாநகராட்சியில் மேயர் மற்றும் 60 வார்டு கவுன்சிலர்கள் தேர்வு செய்வதற்குரிய தேர்தல் ஏற்பாடுகள் சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. மாநகராட்சியில் தேர்தல் பிரிவு அலுவலகம் நேற்று பத்துக்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள், 15க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் மிகுந்த சுறுசுறுப்புடன் இயங்கி கொண்டிருந்தது. மாநகராட்சியில் மொத்தம் 228 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 556 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 646 பெண் வாக்காளர்களும் சேர்த்து மொத்தம் 2 லட்சத்து 32 ஆயிரத்து 202 வாக்காளர்கள் ஓட்டு போடுவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.



இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடும் வகையில் மாநகராட்சி தேர்தல் அதிகாரி கமிஷனர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரடி மேற்பார்வையில் தேர்தல் பிரிவு கண்காணிப்பாளர் ஞானசேகரன் தலைமையில் மாநகராட்சி பணியாளர்கள் வாக்காளர் பட்டியல் கம்ப்யூட்டரில் ஏற்றுதல், பிரிண்டவுட் எடுத்து தவறு எதுவும் இருக்கிறதா என்பதை சரிபார்த்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் அறிவிப்பு நாளை அல்லது நாளை மறுநாள் வெளியாகிவிடும் என்கிற பரபரப்புக்கு இடையே அதற்கு முன்பாக அனைத்து பணிகளையும் நிறைவு செய்யும் வகையில் மாநகராட்சியில் இரவு, பகலாக தேர்தல் பிரிவில் தொடர்ந்து பணிகள் நடந்து வருவதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us