ஓட்டுக்கு பணம்: காங். மீது ஜெத்மலானி திடீர் குற்றச்சாட்டு
ஓட்டுக்கு பணம்: காங். மீது ஜெத்மலானி திடீர் குற்றச்சாட்டு
ஓட்டுக்கு பணம்: காங். மீது ஜெத்மலானி திடீர் குற்றச்சாட்டு
ADDED : செப் 19, 2011 12:11 PM
புதுடில்லி: பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடு்பிற்கு பணம் கொடுத்த வழக்கில் அமர்சிங் பணம் எதுவும் கொடுக்கவில்லை ,காங். தலைவர்கள் தான் கொடுத்தனர் என அவரின் வக்கீல் ராம்ஜெத்மலானி கோர்டில் வாதாடினார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் பணம் கொடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ள அமர்சிங், மற்றும் சோகைல் இந்துஸ்தானி உள்ளிட்டோர் மீதான விசாரணை இன்று கோர்டில் நடந்தது. அப்போது முக்கிய சாட்சியான சோகைல் இந்துஸ்தானி கோர்ட் வாசல் அழைத்துவரப்படும் முன்பு திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அமர்சிங்கின் ஜாமின் மனு 19-ம் தேதி முடிவடைந்தது. பின்னர் இன்று நடந்த விசாரணையில் அமர்சிங் சார்பில் ஆஜரான பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி , கூறுகையில், அமர்சிங் பணம் எதுவும் கொடுக்கவில்லை. காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் தான் பணம் கொடுத்தனர் என திடீர் குற்றம் சாட்டியுள்ளார்.


