ADDED : ஜூலை 26, 2011 11:01 PM
கடலூர் : மனைவியை காணவில்லை என கணவர் போலீசில் புகார் செய்துள்ளார்.
கடலூர், பாதிரிக்குப்பத்தைச் சேர்ந்தவர் நாகராஜன், 62. இவரது மனைவி மீனாட்சி, 58. திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. கடந்த 14ம் தேதி முதல் மீனாட்சியை காணவில்லை. இதுகுறித்து நாகராஜன் கொடுத்த புகாரின் பேரில் கடலூர், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.