/உள்ளூர் செய்திகள்/கடலூர்/உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பால் கடலூரில் 2 மடங்கு வரி வசுல்உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பால் கடலூரில் 2 மடங்கு வரி வசுல்
உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பால் கடலூரில் 2 மடங்கு வரி வசுல்
உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பால் கடலூரில் 2 மடங்கு வரி வசுல்
உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பால் கடலூரில் 2 மடங்கு வரி வசுல்
ADDED : அக் 01, 2011 11:46 PM
கடலூர் : உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்கள் வரி நிலுவை குறித்த தடையில்லா சான்றிதழ் பெற வரி பாக்கியுள்ளவர்கள் செலுத்தியதில் கடந்த ஒரு வாரத்தில் கடலூர் நகராட்சி வரி வசூல் இரண்டு மடங்காக உயர்த்தது.உள்ளாட்சித் தேர்தல் வரும் 17 மற்றும் 19ம் ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் கடந்த செப்டம்பர் 21ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், போட்டியிடும் பகுதியில் அவர்கள் வேட்பாளர்கள் பெயரில் வரி பாக்கியில்லாமல் செலுத்தியிருக்க வேண்டும்.
மேலும் மனு தாக்கலின் போது, மனுவுடன் வரி பாக்கி இல்லை என்ற தடையில்லா சான்றிதழும் இணைக்க வேண்டும். இந்தச் சான்றிதழ் இல்லையென்றால் மனு தள்ளுபடி செய்யப்படும்.இதனால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட் மறுநாள் தேர்தலில் போட்டியிட விரும்பிய அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தங்களது பெயரில் உள்ள வரி பாக்கியை செலுத்தினர். இதனால் நீண்ட கால வரி பாக்கி பலரிடமிருந்து வசூலானது. கடலூர் நகராட்சியில் கடந்த 22ம் தேதி முதல் வரி கட்ட அதிகளவில் குவிந்தனர்.வழக்கமான நாட்களில் கடலூர் நகராட்சியில் ஒரு லட்சத்திலிருந்து அதிகபட்சமாக 2 லட்சம் வரை வரி வசூலாகும். ஆனால் தேர்தல் தேதி அறிவித்த பின், கடந்த 22ம் தேதி முதல் 29ம் தேதி வரை கடலூர் நகராட்சியில் 26 லட்சம் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.


