/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ஊழலற்ற நிர்வாகம் தே.மு.தி.க., உறுதிஊழலற்ற நிர்வாகம் தே.மு.தி.க., உறுதி
ஊழலற்ற நிர்வாகம் தே.மு.தி.க., உறுதி
ஊழலற்ற நிர்வாகம் தே.மு.தி.க., உறுதி
ஊழலற்ற நிர்வாகம் தே.மு.தி.க., உறுதி
ADDED : செப் 29, 2011 10:04 PM
திருப்பூர் : ''நான் வெற்றி பெற்றால் ஊழலற்ற நிர்வாகம், அடிப்படை
வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து பணிகளை மேற்கொள்வேன்,'' என தே.மு.தி.க.,
வேட்பாளர் தினேஷ்குமார் தெரிவித்தார்.
மேயர் பதவிக்கு மனு தாக்கல் செய்த,
தே.மு.தி.க., வேட்பாளர் தினேஷ்குமார் கூறியதாவது: மாநகராட்சிக்கு உட்பட்ட
பகுதிகளில் அடிப்படை வசதிகளை 90 சதவீதம் மேம்படுத்த வேண்டிய நிலை உள்ளது.
நான் வெற்றி பெற்றால், மாநகராட்சியில் ஊழலற்ற நிர்வாகம், அடிப்படை வசதிகளை
மேம்படுத்த முன்னுரிமை அளித்து பணிகள் மேற்கொள்ளப்படும். பல லட்சம்
தொழிலாளர்கள் வந்து செல்லும் பகுதியாக உள்ளது. திருப்பூரில் போக்குவரத்து
நெரிசல் அதிகமாக உள்ளது; சீரமைக்க திட்டமிட்டு பணிகள் செய்யப்படும்.
முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த முறை நிர்வாக
சீர்கேட்டால் மக்கள் பெரிதும் சிரமங்களை அனுபவித்தனர். தற்போது
மாநகராட்சியை ஒட்டியுள்ள ஊரகப் பகுதிகள் இணைந்துள்ளன. அவற்றின்
வளர்ச்சிக்கும் புதிய திட்டங்கள் வகுக்கப்படும், என்றார். தி.மு.க.,
வேட்பாளர் செல்வராஜ் கூறுகையில், ''முன்னாள் முதல்வர் மற்றும் துணை
முதல்வர் ஆகியோரின் ஒத்துழைப்போடு திருப்பூரில் பல்வேறு பணிகள்
செய்யப்பட்டுள்ளன. அதை குறிப்பிட்டு பிரசாரம் செய்யப்படும். மேயர் மற்றும்
60 வார்டுக்கான கவுன்சிலர் பதவிகளிலும் தி.மு.க., அமோக வெற்றி பெறும்.
திருப்பூர் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.,
அமோக வெற்றி பெறும்,'' என்றார்.