/உள்ளூர் செய்திகள்/கடலூர்/இந்திய குடியரசு கட்சி செயல்வீரர்கள் கூட்டம்இந்திய குடியரசு கட்சி செயல்வீரர்கள் கூட்டம்
இந்திய குடியரசு கட்சி செயல்வீரர்கள் கூட்டம்
இந்திய குடியரசு கட்சி செயல்வீரர்கள் கூட்டம்
இந்திய குடியரசு கட்சி செயல்வீரர்கள் கூட்டம்
ADDED : ஜூலை 11, 2011 11:10 PM
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் கடலூர் மாவட்ட இந்திய குடியரசு கட்சி செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் பாலவீரவேல் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் நாகராஜன், மங்காபிள்ளை, வேணுகோபால் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. மாவட்ட துணைத்தலைவராக சந்திரன், மாணவரணி செயலராக அருள், நகர தலைவராக முருகையன், பொருளாளராக சேகர், துணைத் தலைவராக கந்தன், துணைச் செயலராக சுப்ராயலு தேர்வு செய்யப்பட்டனர். சமச்சீர் கல்வியை முறைப்படுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும். குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றித்தர வேண்டுமென்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.