/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஐகோர்ட் கிளை வழக்குகள் சென்னையில் விசாரணை :எதிர்த்த மனு தள்ளிவைப்புஐகோர்ட் கிளை வழக்குகள் சென்னையில் விசாரணை :எதிர்த்த மனு தள்ளிவைப்பு
ஐகோர்ட் கிளை வழக்குகள் சென்னையில் விசாரணை :எதிர்த்த மனு தள்ளிவைப்பு
ஐகோர்ட் கிளை வழக்குகள் சென்னையில் விசாரணை :எதிர்த்த மனு தள்ளிவைப்பு
ஐகோர்ட் கிளை வழக்குகள் சென்னையில் விசாரணை :எதிர்த்த மனு தள்ளிவைப்பு
ADDED : செப் 19, 2011 12:59 AM
மதுரை : மதுரை ஐகோர்ட் கிளை எல்லை வழக்குகளை சென்னையில் விசாரிப்பதை எதிர்த்து தாக்கலான வழக்கு விசாரணையை செப்., 23க்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
மேலூர் எட்டிமங்கலத்தை சேர்ந்த வக்கீல் பி.ஸ்டாலின் தாக்கல் செய்த பொது நல வழக்கில், ''ஐகோர்ட் கிளை எல்லைக்கு உட்பட்ட வழக்குகளை சென்னை ஐகோர்ட்டில் விசாரிக்க தடை விதிக்க வேண்டும். ஐகோர்ட் கிளை வழக்குகளை மதுரையில் விசாரிக்க உத்தரவிட வேண்டும்,'' என கோரினார். மனு நீதிபதிகள் பி.ஜோதிமணி, எம்.எம்.சுந்தரேஷ் முன் விசாரணைக்கு வந்தது. பதிவாளர் ஜெனரல் சார்பில் விரிவாக வாதம் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதனால் விசாரணையை செப்., 23க்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.