/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/திருக்கோவிலூர் பேரூராட்சி வருவாயை உயர்த்த நடவடிக்கை தொகுதி எம்.எல்.ஏ.,விடம் வியாபாரிகள் கோரிக்கைதிருக்கோவிலூர் பேரூராட்சி வருவாயை உயர்த்த நடவடிக்கை தொகுதி எம்.எல்.ஏ.,விடம் வியாபாரிகள் கோரிக்கை
திருக்கோவிலூர் பேரூராட்சி வருவாயை உயர்த்த நடவடிக்கை தொகுதி எம்.எல்.ஏ.,விடம் வியாபாரிகள் கோரிக்கை
திருக்கோவிலூர் பேரூராட்சி வருவாயை உயர்த்த நடவடிக்கை தொகுதி எம்.எல்.ஏ.,விடம் வியாபாரிகள் கோரிக்கை
திருக்கோவிலூர் பேரூராட்சி வருவாயை உயர்த்த நடவடிக்கை தொகுதி எம்.எல்.ஏ.,விடம் வியாபாரிகள் கோரிக்கை
ADDED : ஆக 02, 2011 12:54 AM
திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் பேரூராட்சிக்கு சொந்தமான பல கடைகளுக்கு வாடகை செலுத்தப்படாமல் உள்ளது. பேரூராட்சிக்கு வருவாயை ஏற்படுத்தும் வகையில் வாடகை பாக்கி உள்ள கடைகளுக்கு மறு ஏலம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.திருக்கோவிலூர் பேரூராட்சியில் 10 அடி நீளம், 8 அடி அகலத்தில் கட்டப்பட்ட வணிக வளாக கடைகள் ஒவ்வொன்றும் தலா 8 ஆயிரத்தில் இருந்து 16 ஆயிரம் ரூபாய் வரை மாத வாடகைக்கு ஏலம் போனது. இதன் மூலம் பேரூராட்சிக்கு மாதத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இந்நிலையில் பேரூராட்சிக்கு சொந்தமான பஸ் நிலையம் மற்றும் நகரின் பல்வேறு இடங்களில் இருக்கும் கடைகளை நடத்தி வருபவர்கள் ஆண்டு கணக்கில் வாடகை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளனர். இதனால் பேரூராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வளர்ச்சி பணிகள் பாதிக்கப் பட்டுள்ளது.பல ஆண்டுகளுக்கு முன்னர் பேரூராட்சி கடைகளை ஏலம் எடுத்தவர்கள் மாத வாடகை 300 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை மட்டுமே செலுத்த வேண்டியுள் ளது. அந்த தொகையைகூட முறையாக செலுத்தாமல் ஆண்டு கணக்கில் நிலுவையில் வைத்துள்ளனர். அதற்கான வாடகையையும் உயர்த்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இதுநாள் வரை திருக்கோவிலூர் நகரில் பேரூராட்சி கடைகள் மறைமுக சிண்டிகேட் மூலம் குறைந்த வாடகைக்கு ஏலம் போனது. இந்த நிலை மாறி சமீபத்தில் 20 கடைகள் அதிக தொகைக்கு மாத வாடகை அடிப்படையில் பொது ஏலம் விடப்பட்டுள்ளது. இதனால் மற்ற கடைகளும் நியாயமான முறையில் பொது ஏலம் விடப்பட வேண்டும் என வியாபாரிகள் தரப்பில் எம். எல்.ஏ.,விடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதனை கருத்தில் கொண்டு வெங்கடேசன் எம்.எல்.ஏ., பேரூராட்சியின் வருவாயை அதிகரிக்கவும், பேரூராட்சியின் பழைய கடைகளுக்கு நியாயமான வாடகையை விதிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதன் ஒரு கட்டமாக பேரூராட்சிக்கு சொந்தமான வணிக வளாக கடைகளின் எண்ணிக்கை, அதில் வசூலாகும் வாடகை எவ்வளவு, சொத்துவரி, குடிநீர் வரி செலுத்த வேண்டியவர்களின் விவரம், பேரூராட்சிக்கு சொந்தமான காலி இடங்கள் குறித்த விவரப் பட்டியலை பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரியுள்ளார்.
இதன் மூலம் பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் கடைவைத்து ஆண்டு கணக்கில் வாடகை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளவர்களும், பேரூராட்சி இடங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களும் கலக்கமடைந்துள்ளனர்.
இவற்றையெல்லாம் முறைப் படுத்தினால் பேரூராட்சிக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கும். அதன் மூலம் நகரின் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத் தக்கது.