ADDED : ஆக 03, 2011 10:45 PM
ஊட்டி : ஊட்டி எஸ்.ஆர்.வி.எஸ்., பள்ளி மாணவர்கள் காய்கறிகள் மற்றும் பழங்கள் வேடமிட்டு அவற்றின் மகத்துவத்தை உணர்த்தினர்.
ஊட்டி எஸ்.ஆர்.வி.எஸ்., பள்ளியில் காய்கறி மற்றும் பழங்கள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த தினத்தை முன்னிட்டு மாணவர்கள் காய்கறிகள் மற்றும் பழங்கள் வேடமிட்டு, அவற்றின் மகத்துவம் மற்றும் அவற்றை உண்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கினர். மழலை மொழியில் மாணவர்கள் உணர்த்திய விஷயங்கள் பார்வையாளர்களை சிந்திக்க வைத்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் ஹரி, முதல்வர் உஷா , ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.