/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ரூ.3 கோடி மோசடி பெண் உட்பட மூவர் கைதுரூ.3 கோடி மோசடி பெண் உட்பட மூவர் கைது
ரூ.3 கோடி மோசடி பெண் உட்பட மூவர் கைது
ரூ.3 கோடி மோசடி பெண் உட்பட மூவர் கைது
ரூ.3 கோடி மோசடி பெண் உட்பட மூவர் கைது
ADDED : செப் 30, 2011 11:17 PM
திண்டுக்கல் : குளோபல் கேபிட்டல் மார்க்கெட்டிங் சர்வீஸ் என்ற பெயரில் 150 பேரிடம் மூன்று கோடி ரூபாய் மோசடி தொடர்பாக, நிறுவன உரிமையாளர் பழனிச்சாமி, மனைவி கைது செய்யப்பட்டனர்.தேனி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் பழனிச்சாமி, மனைவி பாக்கியலட்சுமி.
வத்தலக்குண்டில் குளோபல் கேபிட்டல், டிரேடிங் சர்வீஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தினர். ஒரு லட்ச ரூபாய் செலுத்தினால், மாதம்தோறும் வட்டியாக 25 ஆயிரம் தரப்படும் என, அறிவித்தனர். இதை நம்பி திண்டுக்கல் மாவட்டத்தில் 150 பேர், மூன்று கோடி வரை பணம் செலுத்தினர். ஆனால், பணத்தை திருப்பி கொடுக்கவில் லை. ஏமாந்த ரத்தினக்குமார், சுந்தரமூர்த்தி, பெரியகுளம் கல்லுப்பட்டி பிரகாஷ் உட்பட பலர், திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்தனர். பழனிச்சாமி, மø னவி, மருமகன் ராமதாஸ் ஆகியோரை டி.எஸ்.பி., இன்பமணி கைது செய்தார்.