லண்டன் பல்கலை - ஆர்.வி.எஸ்., கல்வி நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம்
லண்டன் பல்கலை - ஆர்.வி.எஸ்., கல்வி நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம்
லண்டன் பல்கலை - ஆர்.வி.எஸ்., கல்வி நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ADDED : ஆக 13, 2011 05:04 PM

கோவை: சூலூர் ஆர்.வி.எஸ்., கல்லூரி கல்வி நிறுவனங்கள் மற்றும் லண்டன் கவென்ட்ரி பல்கலை இடையே, ஐ.டி., இன்ஜி., லாஜிஸ்டிக் ஆகிய துறைகளில், ஒரு வருட எம்.பி.ஏ., படிப்புகளை துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், கையெழுத்தானது.
ஒப்பந்தம் குறித்து ஆர்.வி.எஸ்., கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் செந்தில் கணேஷ் கூறியதாவது: கோவையில் தற்போது ஏற்பட்டுள்ள ஐ.டி., இன்ஜினியரிங், லாஜிஸ்டிக் துறைகளின் வளர்ச்சியையும், இத்துறைகளின் எதிர்கால மேலாண்மை தேவைகளையும் கணக்கில் கொண்டு, இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் துவங்கப்படும் ஒரு வருட எம்.பி.ஏ., படிப்பில், மேலாண்மை துறையில் அனுபவமுள்ள மற்றும் அனுபவமில்லாத அனைவரும் சேரலாம். படிப்பில் சேர்வோருக்கு, இந்திய மற்றும் லண்டன் பல்கலையின் கல்வி நடைமுறைகள், ஆய்வுகள் இரண்டு கட்டங்களாக பயிற்றுவிக்கப்படும். முதல் கட்டம் ஆர்.வி.எஸ்., கல்லூரியிலும், அடுத்தாக கவென்ட்ரி பல்கலையிலும் படிப்பை முடிக்க ஒப்பந்தம் வழிவகை செய்கிறது. இதன் மூலம் இந்திய மாணவர்கள், மேலை நாடுகளில் உள்ள மேலாண்மை சார்ந்த ஆய்வுகள், படிப்புகளை கற்றுக் கொள்ள முடியும். அவை நம் நாட்டிலும் வளர வாய்ப்புள்ளது. படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு மேற்கூறப்பட்ட துறைகளில் வேலைவாய்ப்பு அதிகளவில் உள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
ஆர்.வி.எஸ்., கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் செந்தில் கணேஷ் மற்றும் கவென்ட்ரி பல்கலையின் சர்வதேச அதிகாரி கேத் விஸ்டன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
ஆர்.வி.எஸ்., மேலாண்மை கல்லூரியின் இயக்குனர் பொன்னம்மாள், இன்போசிஸ் ஸ்டடியின் தென்னிந்திய இயக்குனர் ஜார்ஜ் ஆகியோர் உடனிருந்தனர்.