பிளாட்பாரத்தில் உணவுப்பொருள் விற்க தடை நீங்குமா, நீடிக்குமா? உத்தரவை வாபஸ் பெற ஆர்ப்பாட்டம்
பிளாட்பாரத்தில் உணவுப்பொருள் விற்க தடை நீங்குமா, நீடிக்குமா? உத்தரவை வாபஸ் பெற ஆர்ப்பாட்டம்
பிளாட்பாரத்தில் உணவுப்பொருள் விற்க தடை நீங்குமா, நீடிக்குமா? உத்தரவை வாபஸ் பெற ஆர்ப்பாட்டம்
கோவை: ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரங்களில் உணவுப்பொருள் விற்க, ரயில்வே நிர்வாகம் பிறப்பித்த தடை உத்தரவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் நிற்கும் ரயில்களில், உணவுப்பொருட்கள் விற்பனை செய்ய தடை விதித்ததைக் கண்டித்து, கோவை ரயில்வே ஸ்டேஷன் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
கடந்த நான்கு நாட்களாக, டீ, காபி, குளிர்பானம், குடிநீர், பழங்கள், பிஸ்கட் போன்ற எந்தப் பொருளும் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ரயில்வே ஐ.ஜி.,யின் உத்தரவு என்று, ரயில்வே பாதுகாப்புப் படையினர் தடை விதிக்கின்றனர். இந்த உத்தரவின் மூலம், பிளாட்பாரத்தில் கடை எடுத்திருக்கும் முதலாளிகள், தொழிலாளர்கள், பயணிகள் அனைவரும் பாதிக்கப்படுவர். ஏலத்தில் எடுத்த கடைகள் பாதிக்கும் போது, ரயில்வே நிர்வாகத்திற்கு வருவாய் குறையும். உணவுப்பொருள் விற்பனை செய்ய அனுமதிக்கவில்லை என்றால், ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபடுவோம். இவ்வாறு, ராமமூர்த்தி கூறினார். ஆர்ப்பாட்டத்தில், சி.ஐ.டி.யு., மாவட்டச் செயலர் ஆறுமுகம், சாலைப் போக்குவரத்து செயலர் மூர்த்தி, கோவை ஆட்டோ சங்க செயலர் சுகுமாரன், டி.ஆர்.ஈ.யு., சேலம் கோட்ட உதவி தலைவர் குருசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ரயில்வே நிர்வாக உத்தரவு: ரயில்வே பாதுகாப்புப் படை இன்ஸ்பெக்டர் ஷாம்நாத் கூறுகையில், ''பிளாட்பாரங்களில் உணவுப்பொருள் விற்பனை செய்ய தடை விதிக்கும் உத்தரவினை, கடந்த இரண்டு மாதத்திற்கு முன், ரயில்வே நிர்வாகம் பிறப்பித்தது. தற்போது, ஐ.ஜி.,யின் உத்தரவின்படி அமல்படுத்தப்படுகிறது'' என்றார்.