பலத்த மழையால்சந்தைக்குள் புகுந்த நீர்
பலத்த மழையால்சந்தைக்குள் புகுந்த நீர்
பலத்த மழையால்சந்தைக்குள் புகுந்த நீர்
ADDED : செப் 12, 2011 04:04 AM
கோபிசெட்டிபாளையம்: கோபியில் மாலை 4 மணி அளவில் திடீரென மழை பெய்த
துவங்கியது. ஒரு மணி நேரத்துக்கு பலத்த மழை பெய்ததால் சாலைகளில் ஆங்காங்கே
தண்ணீர் ஓடியது.வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துடன் வாகனத்தை ஓட்டி சென்றனர்.
ஒரு மணி நேரம் நீடித்த மழையால், புதுப்பாளையம் மணிமேகலை வீதியில் துவங்கி
சந்தைக்குள் தண்ணீரும், சாக்கடை கழிவு நீரும் சேர்ந்து புகுந்தது.
சாலைகளில் வைக்கப்பட்டு இருந்த 20 கடைகளில் இருந்த தக்காளி, கீரை உள்ளிட்ட
காய்கறிகள் தண்ணீருக்குள் மூழ்கி விட்டது. ஒரு சில கடைகளில் இருந்த
காய்கறிகள் அடித்து சென்று விட்டதால் வியாபாரிகள் கடுமையாக
பாதிக்கப்பட்டனர்.
கோபியில் கீரிப்பள்ளம் ஓடையில் கழிவு நீருடன் மழை நீரும்
சேர்ந்து சென்றதால், கீரிப்பள்ளம் ஓடை அருகில் உள்ள குடியிருப்புக்குள்
தண்ணீர் புகுந்துவிடுமா? என மக்கள் பீதியடைந்தனர். பஸ் ஸ்டாண்ட், சத்தி
சாலை, ஈரோடு சாலை ஆகிய இடங்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்றது.கோபி
அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி பாசன பகுதியில் 24 ஆயிரம் ஏக்கர்
நிலங்களில் நெல், கரும்பு, வாழை, மஞ்சள் உள்ளிட்ட பயிர்கள்
பயிரிடப்பட்டுள்ளது. இதில், 10 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு, அறுவடை
பணி தீவிரமாக நடக்கிறது. நேற்று மாலை கோபி பகுதியில் பலத்த மழை பெய்தது.
பலத்த மழை காரணமாக கோபி, டி.என்.பாளையம், கள்ளிப்பட்டி, கூகலூர் உள்ளிட்ட
பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் அறுவடை பணி
பாதிக்கப்பட்டுள்ளது.