/உள்ளூர் செய்திகள்/சேலம்/40வது வார்டில் அ.தி.மு.க.,வேட்பாளர் தீவிர பிரச்சாரம்40வது வார்டில் அ.தி.மு.க.,வேட்பாளர் தீவிர பிரச்சாரம்
40வது வார்டில் அ.தி.மு.க.,வேட்பாளர் தீவிர பிரச்சாரம்
40வது வார்டில் அ.தி.மு.க.,வேட்பாளர் தீவிர பிரச்சாரம்
40வது வார்டில் அ.தி.மு.க.,வேட்பாளர் தீவிர பிரச்சாரம்
ADDED : அக் 07, 2011 01:41 AM
சேலம்: சேலம் மாநகராட்சி, 40வது வார்டில், அ.தி.மு.க., வேட்பாளர்
பெருமாள்சாமி, தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.சேலம் மாநகராட்சி,
40வது வார்டில், அ.தி.மு.க., வேட்பாளர் பெருமாள்சாமி, தீவிர தேர்தல்
பிரச்சாரம் செய்து வருகிறார். குண்டுபிள்ளையார் கோவில், மாணிக்க வாசகர்
தெரு, வித்யாநகர், பழனிமுத்துரோடு, கிருஷ்ணாநகர், அசோக்நகர், அஷ்டலட்சுமி
தெரு, ஆறுமுகம் நகர், சுப்ரமண்யநகர், பச்சப்பட்டி வடக்கு குறுக்கு சாலை ஆகி
இடங்களில் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்தார்.முன்னாள் அமைச்சர்
பொன்னையன், எம்.எல்.ஏ.,க்கள் செல்வராஜ், வெங்கடாசலம், முன்னாள் எம்.எல்.ஏ.,
வெங்கடாசலம், அவை தலைவர் உசேன், பகுதி செயலாளர் பிரகாஷ், ஆறுமுகம்,
கிருஷ்ணமூர்த்தி, சந்திரன், அன்பு, மகேஸ்வரி உள்ளிட்ட பலர்,
பெருமாள்சாமிக்கு ஆதரவாக ஓட்டு சேகரித்தனர்.
பிரச்சாரத்தில் பெருமாள்சாமி கூறியதாவது:முதல்வர் ஜெயலலிதாவின் நான்கு மாத
சாதனைகள் கூறி வாக்கு சேகரித்து வருகிறேன். ஒருமுறை கவுன்சிலராக இருந்து
மக்களுக்கு பல்வேறு பணிகளை செய்து கொடுத்துள்ளேன். மக்கள் ஆதரவால்,
மீண்டும் வெற்றி பெறுவேன். எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.இவ்வாறு பேசினார்.


