Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/சமச்சீர்கல்வியை அமல்படுத்தக்கோரிஆர்ப்பாட்டம்முன்னாள் அமைச்சர் உட்பட 54பேர் கைது

சமச்சீர்கல்வியை அமல்படுத்தக்கோரிஆர்ப்பாட்டம்முன்னாள் அமைச்சர் உட்பட 54பேர் கைது

சமச்சீர்கல்வியை அமல்படுத்தக்கோரிஆர்ப்பாட்டம்முன்னாள் அமைச்சர் உட்பட 54பேர் கைது

சமச்சீர்கல்வியை அமல்படுத்தக்கோரிஆர்ப்பாட்டம்முன்னாள் அமைச்சர் உட்பட 54பேர் கைது

ADDED : ஜூலை 30, 2011 02:20 AM


Google News
திருநெல்வேலி:சமச்சீர்கல்வியை அமல்படுத்தக் கோரி பாளை., மற்றும் நெல்லை டவுனில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் பூங்கோதை உட்பட 54 திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.சமச்சீர்கல்வியை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை அமல்படுத்தக் கோரி திமுக மாணவரணி,இளைஞரணி உட்பட பல்வேறு அணியினர் தமிழகம் முழுவதும் நேற்று போராட்டம் நடத்தினர்.அதுபோல் பாளை., பஸ் ஸ்டாண்ட் அருகில் துணை மேயர் முத்துராமலிங்கம் தலைமையில் முன்னாள் அமைச்சர் பூங்கோதை, கவுன்சிலர்கள் பேபிகோபால், துரை மற்றும் கோமதிநாயகம், கருப்பாசமி, வண்ணைராஜா, சீனியம்மாள் உட்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாளை., இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் மற்றும் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் பூங்கோதை உட்பட 34 பேரை கைது செய்தனர்.

நெல்லை டவுன்நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி பள்ளி அருகில் முன்னாள் எம்எல்ஏ.,மாலை ராஜா தலைமையில் உலகநாதன், நாதன், ராமச்சந்திரன், கவுன்சிலர் ரேவதி அசோக், அசோக், ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் சூர்யபாலன் உட்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட 20 பேரை கைது செய்தனர்.ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு கல்லணை மாநகராட்சி பள்ளி முன் மாநகர குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஜெயபால், உதவி கமிஷனர் ஸ்டாலின், இன்ஸ்பெக்டர் குருநாதன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.திமுகவினர் போராட்ட அறிவிப்பை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் உள்ள தனியார், சுயநிதி மற்றும் அரசு பள்ளிகள் அனைத்தும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வழக்கம் போல் இயங்கின.நேற்று காலை 9.30 மணிக்கு பள்ளிகளின் மெயின் கேட்கள் பூட்டப்பட்டன. இதன் பின்னர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வெளியே செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us