/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மனு தாக்கல் செய்ய கட்சியினர் குவிந்தனர் ஒன்றிய அலுவலகங்கள் திருவிழா கோலம்மனு தாக்கல் செய்ய கட்சியினர் குவிந்தனர் ஒன்றிய அலுவலகங்கள் திருவிழா கோலம்
மனு தாக்கல் செய்ய கட்சியினர் குவிந்தனர் ஒன்றிய அலுவலகங்கள் திருவிழா கோலம்
மனு தாக்கல் செய்ய கட்சியினர் குவிந்தனர் ஒன்றிய அலுவலகங்கள் திருவிழா கோலம்
மனு தாக்கல் செய்ய கட்சியினர் குவிந்தனர் ஒன்றிய அலுவலகங்கள் திருவிழா கோலம்
ADDED : செப் 29, 2011 10:16 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி வடக்கு, தெற்கு ஒன்றியங்களில், உள்ளாட்சி
தேர்தலுக்கு மனுதாக்கல் செய்ய கட்சியினர் அதிகளவில் குவிந்ததால், அலுவலக
வளாகம் திருவிழா கோலம் பூண்டது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கான மனுதாக்கல்
கடந்த 22ம் தேதி முதல் நேற்று வரை நடந்தது. மனுதாக்கல் செய்ய நேற்று இறுதி
நாள் என்பதால், காலை 9.00 மணி முதல் பொள்ளாச்சி, வடக்கு ஒன்றிய அலுவலகங்கள்
பரபரப்பானது. வேட்பாளர்கள், காலை 10.00 மணிக்கு ஒன்றிய அலுவலங்களுக்கு
வந்தனர். கட்சி வேட்பாளர்களுடன், உள்ளூர் கட்சியினர், ஊர் மக்கள் என இரண்டு
ஒன்றிய அலுவலகங்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மனுதாக்கல்
துவங்கியவுடன், வடக்கு ஒன்றிய வளாக முன் 'கேட்' மட்டும் அடைக்கப்பட்டது.
வேட்பாளர்களுடன் முக்கிய கட்சியினர் மட்டும் தெற்கு ஒன்றிய வளாக முன் கதவு
வழியாக உள்ளே வர அனுமதிக்கப்பட்டனர். வளாகத்தில், கூட்ட நெரிசல் இருந்ததால்
வாகனங்கள் அலுவலக வளாகத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால்,
பாலக்காடு ரோட்டில் அரை கி.மீ., தூரம் டூவிலர் மற்றுர் கார் உள்ளிட்ட
வாகனங்கள் ரோட்டின் இருபுறமும் நிறுத்தி வைக்கப்பட்டன. ஒன்றிய அலுவலகங்கள்
முன் கூடி இருந்த தொண்டர்கள், மனுதாக்கல் செய்து முடித்து வெளியே வரும்
வேட்பாளர்களுக்கு மாலை அணிவித்தும், கைத்தட்டி, விசில் அடித்தும்
உற்சாகப்படுத்தினர். திரும்பிய பக்கமெல்லாம், கட்சி கொடி, கரை வேட்டி,
புடவை என கூட்டம் அலைமோதியது. இதனால், நேற்று ஒன்றிய அலுவலகங்கள் திருவிழா
கோலம் பூண்டன. பகல் 1.00 மணிக்குள், பெரும்பாலான வேட்பாளர்கள் மனுதாக்கல்
செய்தனர். சுயேச்சை வேட்பாளர்களில், சிலர் பகல் 1.00 மணிக்குப்பின்
மனுதாக்கல் செய்ய வந்தனர். திக்குமுக்காடிய அதிகாரிகள் ஒன்றிய
அலுவலகங்களில், ஊராட்சி தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி வார்டு
கவுன்சிலர் பதவிக்கு மனுதாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. நேற்று
காலை 11.00 மணி முதல் தொடர்ந்து மனுதாக்கல் செய்ய கட்சியினர் ஆர்வம்
காட்டினர். இதனால், மனுதாக்கல் செய்ய ஒதுக்கப்பட்ட அறைகளில்
வேட்பாளர்களும், அவர்களுடன் வந்தவர்களும் கூடினர். அ.தி.மு.க., -
தே.மு.தி.க., - தி.மு.க., - பா.ம.க., என அனைத்து கட்சியினரும் ஒரே
நேரத்தில் மனுதாக்கல் செய்ய வந்ததால், ஒன்றிய அதிகாரிகள்
திக்குமுக்காடினர். கட்சி வேட்பாளர்கள் ஒவ்வொருவரின் வேட்பு மனுக்களும்
தனித்தனியாக பெறப்பட்டது.