/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/இணைப்பு ரோடு இல்லாததால் அதிகரித்து வரும் விபத்துகள்இணைப்பு ரோடு இல்லாததால் அதிகரித்து வரும் விபத்துகள்
இணைப்பு ரோடு இல்லாததால் அதிகரித்து வரும் விபத்துகள்
இணைப்பு ரோடு இல்லாததால் அதிகரித்து வரும் விபத்துகள்
இணைப்பு ரோடு இல்லாததால் அதிகரித்து வரும் விபத்துகள்
ADDED : ஜூலை 25, 2011 10:46 PM
தாடிக்கொம்பு : தாடிக்கொம்பு அருகே சர்வீஸ் ரோடு இல்லாததால் விபத்துகள் அதிகரித்து வருகிறது.
தாடிக்கொம்பு அருகே குடகனாற்று பாலத்தை கடந்ததும் உள்ளது இடையகோட்டை பிரிவு. இடையகோட்டை ரோடு, நான்கு வழிச்சாலையுடன் இணையும் போது, சர்வீஸ் ரோடு அமைக்காமல், நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இணைப்பு பகுதி மிகவும் மேடாக இருப்பதால், மெயின் ரோட்டில் வாகனங்கள் வருவது தெரிவதில்லை. இதனால் இப்பகுதியில் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. பிரிவு ரோட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் மெயின் ரோட்டிற்கு வரும் போது, விபத்து ஏற்பட்டு, ஒருவர் இறந்தார். இதே இடத்தில் விபத்தில் சிக்கிய தீப்பெட்டி ஏற்றி சென்ற லாரி சம்பவ இடத்திலேயே தீ பிடித்து எரிந்து, நாசமானது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு பிரிவு ரோட்டிலிருந்து வந்த காரின் பின்பகுதியில், மெயின் ரோட்டிலில் வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அனைவரும் உயிர்தப்பினர். இப்பகுதியில் சர்வீஸ் ரோடு அமைத்தால் விபத்துக்களை தவிர்க்கலாம். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.