/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/பாளை.,யில் 3 மாவட்ட செஸ் போட்டி பரிசளிப்பு விழாபாளை.,யில் 3 மாவட்ட செஸ் போட்டி பரிசளிப்பு விழா
பாளை.,யில் 3 மாவட்ட செஸ் போட்டி பரிசளிப்பு விழா
பாளை.,யில் 3 மாவட்ட செஸ் போட்டி பரிசளிப்பு விழா
பாளை.,யில் 3 மாவட்ட செஸ் போட்டி பரிசளிப்பு விழா
ADDED : ஆக 17, 2011 02:27 AM
திருநெல்வேலி : பாளை.,யில் 3 மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கான பரிசளிப்பு விழா நடந்தது.
பாளை., செஸ் சங்கம் சார்பில் நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுபிரிவுகளுக்கான செஸ் போட்டி பாளை., சொர்ணம் திருமண மகாலில் கடந்த 2 நாட்களாக நடந்தது. துவக்க நாளான்று செஸ் போட்டியை சர்வதேச மதிப்பீடு பெற்ற சீனியர் செஸ் வீரர் ஜாக்கப் ரேக்லண்ட் துவக்கி வைத்தார். கடந்த 2 நாட்களாக நடந்த போட்டியில் 3 மாவட்டங்களை சேர்ந்த 113 மாணவ, மாணவிகள் உட்பட 138 பேர் கலந்து கொண்டனர். போட்டியின் நடுவர்கள் முத்துராஜா, தமிழ் கண்ணன் சிறந்த வீரர்களை தேர்வு செய்தனர். இதில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான பிரிவில் முதல் 3 இடங்களை நாகர்கோவில் தனுஷா, சாந்தலட்சுமி, அக்ஷயா பிடித்தனர். 6 முதல் 8ம் வகுப்பு பிரிவில் நாகர்கோவில் முத்துக்குமார் முதலிடத்தையும், தென்காசி கோமதிநாயகம் 2ம் இடத்தையும், நெல்லை சுதிர் 3ம் இடத்தையும் பிடித்தனர். 9 முதல் 12ம் வகுப்பு பிரிவில் நாகர்கோவில் சுல்தானா முதலிடத்தையும், ஸ்ரீவைகுண்டம் அருண்சுந்தர் 2ம் இடத்தையம், நெல்லை குறள் அமுதன் 3ம் இடத்தையும் பிடித்தனர். பொதுப்பிரிவில் பாளை.யை சேர்ந்த ஸ்கேனி, கருணாகரன் முதல் 2 இடங்களையும், வீரவநல்லூர் விஜயராம் 3ம் இடத்தையும் பிடித்தனர்.
பரிசளிப்பு விழா : செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நேற்று மாலை நடந்தது. விழாவிற்கு பாளை.,செஸ் சங்க தலைவர் கருணாகரன் தலைமை வகித்தார். விஜயராம் முன்னிலை வகித்தார்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வைர வியாபாரி நவநீதகிருஷ்ணன், மாவட்ட செஸ் கழக செயலாளர் கார்டுசன், ஜூனியர் டெலிகாம் அலுவலர் சங்கரநாராயணன் போட்டியின் முதல் 3 பிரிவுகளில் முதல் 5 இடங்களையும், பொதுப்பிரிவில் முதல் 10 இடங்களையும் பிடித்தவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். ஏற்பாடுகளை பாளை., செஸ் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.