ADDED : செப் 16, 2011 03:18 AM
தியாகதுருகம்:விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் அடுத்த பாவந்தூர்
கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் மனைவி சிவகாமி,28.
இவர் நேற்று முன்தினம்
இரவு தனது தாயுடன் வீட்டின் கதவை பூட்டிவிட்டு தூங்கியுள்ளார். அப்போது
மர்ம நபர்கள் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 10 சவரன் தங்க நகைகள் மற்றும்
35 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிசென்றனர்.இது குறித்து சிவக்குமார் கொடுத்த
புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


