/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/நுகர்வோர் குறைதீர்ப்பு வழக்கு மாணவர்களுக்கு நேரடி பயிற்சிநுகர்வோர் குறைதீர்ப்பு வழக்கு மாணவர்களுக்கு நேரடி பயிற்சி
நுகர்வோர் குறைதீர்ப்பு வழக்கு மாணவர்களுக்கு நேரடி பயிற்சி
நுகர்வோர் குறைதீர்ப்பு வழக்கு மாணவர்களுக்கு நேரடி பயிற்சி
நுகர்வோர் குறைதீர்ப்பு வழக்கு மாணவர்களுக்கு நேரடி பயிற்சி
ADDED : ஆக 01, 2011 01:27 AM
விழுப்புரம் : அரசு பள்ளி மாணவர்கள் விழுப்புரம் நுகர்வோர் குறைதீர்ப்பு மன்ற வழக்குகளை நேற்று பார்வையிட்டனர்.மாணவர் நுகர்வோர் மன்றம் சார்பில் கொங்கரப்பட்டு அரசு மேல்நிலை பள்ளியில் 8 மற்றும் 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நுகர்வோர் பிரச்னைகள், அதை எதிர்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்த பயிற்சி நடந்தது.
இப்பயிற்சியை மாணவர்களுக்கு ஆசிரியை லட்சுமி அளித்தார். இறுதி கட்ட பயிற்சியை யொட்டி பள்ளி தலைமை ஆசிரியர் லலிதா தலைமையில் மாணவ, மாணவிகள் நேற்று விழுப்புரம் கிழக்கு பாண்டி ராட்டில் உள்ள நுகர்வோர் குறைதீர்ப்பு மன்றத்தில் நடைபெறும் வழக்குகளை நேரில் பார்வையிட்டனர்.பின் இந்த வழக்குகள் குறித்தும், கடைகளில் வாங்கும் பொருட்களின் தரத்தை ஆராயும் முறை பற்றியும் நுகர்வோர்மன்ற நீதிபதி ஜெயபால் மாணவர்களிடம் விளக்கினார்.