/உள்ளூர் செய்திகள்/கரூர்/ஆப்ரேஷன் தியேட்டர் கதவடைப்பு பிரசவத்துக்கு பின் பெண்கள் அவதிஆப்ரேஷன் தியேட்டர் கதவடைப்பு பிரசவத்துக்கு பின் பெண்கள் அவதி
ஆப்ரேஷன் தியேட்டர் கதவடைப்பு பிரசவத்துக்கு பின் பெண்கள் அவதி
ஆப்ரேஷன் தியேட்டர் கதவடைப்பு பிரசவத்துக்கு பின் பெண்கள் அவதி
ஆப்ரேஷன் தியேட்டர் கதவடைப்பு பிரசவத்துக்கு பின் பெண்கள் அவதி
ADDED : ஆக 21, 2011 02:14 AM
குளித்தலை: இனுங்கூர் வட்டார ஆரம்ப சுகாதார மையத்தில், குடும்பக் கட்டுப்பாடு ஆப்ரேஷன் தியேட்டர் திறக்கப்படாமல் பூட்டிக்கிடப்பதால், பிரசவம் முடித்த பெண்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள இனுங்கூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரால் திறந்து வைக்கப்பட்டது. இம்மையத்தின் கீழ் இனுங்கூர், நச்சலூர், வலையப்பட்டி, அய்யர்மலை என நான்கு ஆரம்ப சுகாதார மையம் இயங்கி வருகின்றன. ஆரம்ப சுகாதார மையத்துக்கு வரும் கிராம தாய்மார்கள், பிரசவம், குடும்ப கட்டுப்பாடு ஆப்ரேஷன் செய்ய இனுங்கூர் ஆரம்ப சுகாதார மையத்துக்கு செல்ல வேண்டும். இங்கு குடும்ப கட்டுப்பாட்டு ஆப்ரேஷன் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே செய்யப்படும்.
இனுங்கூர் மற்றும் அதன் சுற்றுப்புறத்தை சேர்ந்த கர்ப்பிணிப் பெண்களுக்கு வரப்பிரசாதமாக இருந்த, வட்டார ஆரம்ப சுகாதார மையம், மராமத்து பணிகள் என்ற பெயரில், கடந்த எட்டு மாதத்துக்கு மேலாக மூடப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்தும் ஆப்ரேஷன் தியேட்டர் பூட்டியே இருக்கிறது.
இதனால் குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ளும் கிராமப்புற தாய்மார்கள் மிகவும் பாதிப்புக்கும் ஏமாற்றத்துக்கும் ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து இனுங்கூர் வட்டார ஆரம்ப சுகாதார அதிகாரி டாக்டர் சாந்தி கூறியதாவது:
ஆபரேசன் தியேட்டர் மராமத்து பணிகள் செய்து முடிக்கப்பட்டு பொதுப்பணித்துறையினர் இரண்டு மாதத்துக்கு முன் ஒப்படைத்தனர். தற்போது தியேட்டரில் நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதால் கூடுதல் மின்சாரம் தேவைப்படுகிறது. மும்முனை மின் இணைப்புக்காக நச்சலூர் துணை மின் நிலையத்தில் முறையாக விண்ணப்பம் அளித்துள்ளோம். நச்சலூர் மின்சார வாரியத்துக்கு 83 ஆயிரம் ரூபாய் நிலுவையில் இருப்பதால் இணைப்பு பெறுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. விரைவில் மின் இணைப்பு செய்து தியேட்டர் இயங்கும். இவ்வாறு அவர் கூறினார்.