/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை தேர்தல் அலுவலர்கள் செல்போன் சுவிட்ச் ஆப் ஆக கூடாதுஉள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை தேர்தல் அலுவலர்கள் செல்போன் சுவிட்ச் ஆப் ஆக கூடாது
உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை தேர்தல் அலுவலர்கள் செல்போன் சுவிட்ச் ஆப் ஆக கூடாது
உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை தேர்தல் அலுவலர்கள் செல்போன் சுவிட்ச் ஆப் ஆக கூடாது
உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை தேர்தல் அலுவலர்கள் செல்போன் சுவிட்ச் ஆப் ஆக கூடாது
ADDED : செப் 22, 2011 12:03 AM
தூத்துக்குடி : உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை தேர்தல்
பணியில் ஈடுபடும் அலுவலர்கள் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யக் கூடாது.
நாட்
ரீச்சபிள் வராமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று தேர்தல் பணியில் ஈடுபட
உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும்
அலுவலர்களுக்கு நடந்த பயிற்சியில் கலெக்டர் ஆஷீஷ்குமார் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் ஜரூராக
நடந்து வருகிறது. உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றக் கூடிய தேர்தல் நடத்தும்
அதிகாரிகள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தேர்தலில் எப்படி
பணியாற்ற வேண்டும் என்பது குறித்து முதல் கட்ட விரிவான பயிற்சி நேற்று
கலெக்டர் அலுவலக முத்துஅரங்கில் நடந்தது. கலெக்டர் ஆஷீஷ்குமார் தலைமை
வகித்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் அருண்மணி, எலக்ஷன்
பி.ஏ லோகநாதன், மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் பெல்லா ஆகியோர் முன்னிலை
வகித்தனர். கூட்டத்தை துவக்கி வைத்து கலெக்டர் பேசியதாவது;தூத்துக்குடி
மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை எந்தவித பிரச்னைக்கும் இடமின்றி நல்ல
முறையில் சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும். ஏற்கனவே பல்வேறு தேர்தலில்
பணியாற்றிய அனுபவம் இருக்கிறது என்றாலும் மிக கவனமாக உள்ளாட்சி தேர்தலில்
பணியாற்ற வேண்டும். கடந்த முறை உள்ள நடைமுறை தானே இந்த தேர்தலுக்கும் என்று
இருந்து விடக் கூடாது. இந்த முறை தேர்தலில் எந்த முறையிலான விதிகள்
உள்ளிட்டவை சொல்லப்பட்டுள்ளது என்பது குறித்து அனைவருக்கும் தேர்தல்
விதிமுறைகள் குறித்த அனைத்து விபரம் கொடுக்கப்பட்டுள்ளது.தேர்தல்
சம்பந்தமாக அளிக்க கூடிய அனைத்து தகவல்களையும் முழுமையாக தேர்தல் நடத்தும்
அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் படிக்க வேண்டும். இதனை
தேர்தலில் பணியாற்றக் கூடிய ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கும் தெரிவிக்க
வேண்டும். பொது தேர்தலை போன்று அல்லாமல் உள்ளாட்சி தேர்தலில் மிக அதிக
எண்ணிக்கையில் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். இதனால் சிம்பல்
ஒதுக்குவதில் ஏதாவது பிரச்னை வராமல் பார்த்து கொள்ள வேண்டும். சென்சிட்டிவ்
ஏரியாக்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்படும்.
இருப்பினும் தேர்தல் நடத்தும் அலுவலர்களும் இதில் கவனமாக செயல்பட வேண்டும்.
ஏற்கனவே உள்ள பாதுகாப்பு போதவில்லை என்றால் கூடுதலாக தேவைப்பட்டால்
உடனடியாக தெரிவிக்க வேண்டும்.தேர்தல் பணியாற்றும் அதிகாரிகள் எந்த காரணம்
கொண்டும் செல்போனை சுவிட்ச் ஆப் செய்யக் கூடாது. இதற்கு காரணம் உடனடியாக
எந்த நேரமும் இதன் மூலம் தான் தொடர்பு கொள்ள வேண்டியுள்ளது. இதனால் ஓட்டு
எண்ணிக்கை வரை சுவிட்ச் ஆப் செய்யாமலும், நாட் ரீச்சபிள் வராத அளவிற்கு
கவனமாக இருக்க வேண்டும். இதில் மாவட்ட தேர்தல் பிரிவு அதிக கண்காணிப்பு
செய்யும். பயிற்சியில் சொல்லிக் கொடுப்பதை கவனமாக கேட்டு அவை அனைத்தையும்
தெரிந்து கொள்ள வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்சாயத்துக்களில்
இ.வி.எம் பயன்படுத்தப்படுவதால் வேட்பாளர்கள் அதிகம் போட்டியிட்டால் கூடுதல்
இ.வி.எம் வைக்க வேண்டியது வரும். இதனால் இ.வி.எம் செயல்பாடுகள் குறித்து
முழுமையாக நகர்புற உள்ளாட்சியினர் அறிந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு சிறு
டவுட் வந்தாலும் உள்ளாட்சி தேர்தல் பிரிவில் கேட்டு அந்த டவுட்டை
உடனுக்குடன் கிளியர் செய்து கொள்ள வேண்டும். ஏதாவது கேட்கும் போது அது
தெரியாது. அதுபற்றி தெரிவிக்கவில்லை. இது பற்றி தெரிவிக்கவில்லை என்று
கூறக் கூடாது. அப்படி கூறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை
எடுக்கப்படும். இதனால் விதிமுறைகள் குறித்த விபரம் முழுவதையும் முழுமையாக
படித்து தெரிந்து கொள்ள வேண்டும். அலுவலகங்களில் கம்ப்யூட்டர் வசதி எல்லா
இடங்களிலும் இருக்கிறது. இண்டெர்நெட் வசதி இல்லாமல் இருக்கிறது. உடனடியாக
இண்டர்நெட் வசதியை வாங்கிக் கொள்ள வேண்டும். பேக்ஸ் இருந்தால் அவை நல்ல
முறையில் இயங்குகிறதா என்பதை பார்த்து தயார் நிலையில் வைத்து கொள்ள
வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார். மாநகராட்சி கமிஷனர் தினேஷ் பொன்ராஜ்
ஆலிவர், டி.எஸ்.ஓ பஷீர், சிரஸ்தார் பழனி, தேர்தல் பிரிவு லக்குவன்,
மாசாணம், மாநகராட்சி இளநிலை பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், நகரமைப்பு
பிரிவு அலுவலர் ராமச்சந்திரன், நகரமைப்பு ஆய்வாளர்கள் காந்திமதி, ஆறுமுகம்,
சுகாதார ஆய்வாளர் திருமால்சாமி, தேர்தல் பிரிவு கண்காணிப்பாளர் ஞானசேகரன்,
சமூகபாதுகாப்பு திட்ட தாசில்தார் ராமசுப்பிரமணியன் மற்றும் 200க்கும்
மேற்பட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.