சிக்னல் பாக்சில் சிக்கிய "கேட்' சாவி:பயணிகள் ரயில் 45 நிமிடம் தாமதம்
சிக்னல் பாக்சில் சிக்கிய "கேட்' சாவி:பயணிகள் ரயில் 45 நிமிடம் தாமதம்
சிக்னல் பாக்சில் சிக்கிய "கேட்' சாவி:பயணிகள் ரயில் 45 நிமிடம் தாமதம்
ADDED : செப் 09, 2011 02:26 AM
வேலூர்:சிக்னல் பாக்சில், 'கேட்' சாவி சிக்கியதால், பயணிகள் ரயில், 45 நிமிடம் நிறுத்தப்பட்டது.வேலூர், கன்டோன்மென்ட் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து அரக்கோணத்துக்கு, பயணிகள் ரயில், நேற்று காலை 6 மணிக்கு அன்வர்த்திகான் பேட்டை ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தது.அப்போது, ரயில்வே 'கேட்' போட அங்கிருந்த ஊழியர், சிக்னல் பாக்சில் சாவியைச் செருகினார்.
சிக்னல் விழாமல், சாவியும் வராமல் சிக்கி, ரெட் சிக்னல் எரிந்து கொண்டிருந்ததால், 45 நிமிடம் அங்கேயே ரயில் நிறுத்தப்பட்டது. அதிகாரிகள் உத்தரவுப்படி, பச்சைக் கொடியைக் காண்பித்து, ரயில் இயக்கப்பட்டது. 45 நிமிடங்கள் 'கேட்' திறக்கப்படாமல் இருந்ததால், அன்வர்த்திகான் பேட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள, 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தண்டவாளத்தைக் கடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.மகேந்திரவாடி ஸ்டேஷனில் இருந்து, சிக்னல் ஆபரேட்டர்கள் வந்து, சிக்கிய சாவியை எடுத்தனர். அதன் பிறகு, ரயில் போக்குவரத்து சீரானது. அரக்கோணம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.