Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ஸ்ரீபெரும்புதூர் அருகே அடுத்தடுத்து மூன்று வீடுகளில் கொள்ளை

ஸ்ரீபெரும்புதூர் அருகே அடுத்தடுத்து மூன்று வீடுகளில் கொள்ளை

ஸ்ரீபெரும்புதூர் அருகே அடுத்தடுத்து மூன்று வீடுகளில் கொள்ளை

ஸ்ரீபெரும்புதூர் அருகே அடுத்தடுத்து மூன்று வீடுகளில் கொள்ளை

ADDED : அக் 01, 2011 11:06 PM


Google News

ஸ்ரீபெரும்புதூர் : ஸ்ரீபெரும்புதூர் அருகே, நள்ளிரவு, அடுத்தடுத்து மூன்று வீடுகளில், மர்ம நபர்கள் புகுந்து, 15 சவரன் தங்க நகைகள் மற்றும் பொருட்களை திருடிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ளது போந்தூர் கிராமம்.

ஸ்ரீபெரும்புதூர்-சிங்கப்பெருமாள் கோவில் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.இக்கிராமத்தில் உள்ள பாரிஜாதம் தெருவில் வசிப்பவர் வீரராகவன், 38. மளிகைக் கடை வைத்துள்ளார். இவரது மனைவி காந்திமதி. இவர்களுக்கு, 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு, அனைவரும் படுத்து தூங்கினர். நள்ளிரவு மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து, பீரோவை உடைத்து, அதிலிருந்த ஐந்து ஒரு சவரன் தங்கச் செயின், கால்காசு பத்து, தூங்கிக் கொண்டிருந்த காந்திமதி கழுத்திலிருந்த, ஐந்து சவரன் தங்கத்தாலி ஆகியவற்றை திருடிச் சென்றனர்.அதன்பின், மர்ம நபர்கள், அதே தெருவில் வசிக்கும் வெங்கடேசன் வீட்டிற்குள் புகுந்துள்ளனர். அவரது மனைவி சகிலா கழுத்திலிருந்த தங்கத்தாலி, தங்க கால்காசு, என இரண்டு சவரன் நகைகளை திருடியுள்ளனர்.பின், அதே தெருவில் வசிக்கும் செல்லப்பன் வீட்டிற்குள் புகுந்துள்ளனர். வீட்டிலிருந்த கைக்கடிகாரம், அவரது பாக்கெட்டிலிருந்த, 2 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை திருடியுள்ளனர். சத்தம் கேட்டு எல்லப்பன் குடும்பத்தினர் எழுந்துள்ளனர். உஷாரான மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.தகவல் அறிந்து, ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் டி.எஸ்.பி., கஜேந்திரகுமார் தலைமையில், போலீசார், விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.இது குறித்து, போந்தூர் கிராம மக்கள் கூறுகையில், 'இதுபோன்ற சம்பவங்களை தடுக்க, போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். போலீஸ் சோதனை நிலையம் அமைக்க வேண்டும்' என்றனர்.ஸ்ரீபெரும்புதூர் டி.எஸ்.பி., கஜேந்திரகுமார் கூறும்போது, '' ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும், போலீசார் இரவு ரோந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இன்ஸ்பெக்டர் தலைமையில், ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். கிராமங்களில் சந்தேகிக்கும்படி வெளி ஆட்கள் இருந்தால், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும்.வீட்டை வாடகைக்கு விடும் உரிமையாளர்கள், வாடகை கோரும் நபரின் முழு விவரம், போட்டோ, மொபைல் போன் எண், ஆகியவற்றை பெற்றுக் கொள்ள வேண்டும்,''என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us