/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/அரசு பஸ் டிரைவர் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்அரசு பஸ் டிரைவர் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்
அரசு பஸ் டிரைவர் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்
அரசு பஸ் டிரைவர் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்
அரசு பஸ் டிரைவர் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 22, 2011 12:30 AM
திருத்தணி : கல்லூரி பஸ் நிறுத்தத்தில், பஸ்சை நிறுத்தாத டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வருகிறது திருத்தணி அரசு கலைக் கல்லூரி. இக்கல்லூரியில் 2,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் 3 மணிக்கு, திருவள்ளூரில் இருந்து திருத்தணி நோக்கி தடம் எண் 97 என்ற அரசு வந்துக் கொண்டிருந்தது. பஸ் டிரைவர் வடிவேல், கல்லூரி நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்தி கல்லூரி மாணவர்களை ஏற்றிக் கொண்டு இருந்தார். மாணவர்கள் அனைவரும் ஏறிய பின்பு டிரைவர் பஸ்சை இயக்கினார். அப்போது பஸ்சில் இருந்து கல்லூரி மாணவன் ஒருவன், டிரைவரிடம் என் காதலி கல்லூரியில் இருந்து ஓடி வருகிறாள். அதுவரை பஸ்சை எடுக்கக்கூடாது என தகராறு செய்தார். டிரைவர் அந்த மாணவி அடுத்த பஸ்சில் வரட்டும் என கூறி, பஸ்சை ஓட்டிக் கொண்டு திருத்தணி பஸ் நிலையத்திற்கு வந்தார். இதையடுத்து, கல்லூரி மாணவர்களுக்கும், பஸ் டிரைவருக்கும் இடையே சிறிது வாய் தகராறு ஏற்பட்டு பின்னர் கலைந்து சென்றனர். நேற்று காலை வழக்கம் போல் கல்லூரி வந்த மாணவர்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், காலை 11 மணிக்கு வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் அரசு பஸ் டிரைவர் வடிவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், திருத்தணி தாசில்தார் ஜெயா, போக்குவரத்து கிளை மேலாளர் ஸ்ரீதர், இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மாணவர்களிடத்தில் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, மாணவர்கள், 'திருத்தணியில் இருந்து 6 கி.மீ., தொலைவில் கல்லூரி அமைந்துள்ளதால் பெரும்பாலானோர் மாணவர்கள் பஸ்சில் தான் பயணம் செய்கிறோம்.
இங்குள்ள பஸ் நிறுத்தத்தில் சில பஸ்கள் மட்டும் நின்று செல்கிறது. இவ்வழியாக செல்லும் அனைத்து அரசு பஸ்கள் நின்று செல்ல வேண்டும் என கூறினர். மேலும், கல்லூரி மாணவர்களை திட்டிய டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தினர். போக்குவரத்து கிளை மேலாளர் ஸ்ரீதர் 'இனி வரும் காலங்களில் காலை மற்றும் மாலை வேளைகளில் மட்டும் இவ்வழியாக செல்லும் அனைத்து பஸ்களையும், கல்லூரி நிறுத்தத்தில் நின்று செல்வதற்கு ஏற்பாடு செய்கிறேன்' என உறுதி கூறினார். இதை தொடர்ந்து மாணவர்கள் கலைந்து சென்றனர். இதனால் ஒன்றரை மணி நேரம் வகுப்புகள் பாதிக்கப்பட்டது.