திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் 13 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.மதுரை மாநகர் இன்ஸ்பெக்டர் குமார், திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கும், திருச்சியில் பணிபுரிந்த இன்ஸ்பெக்டர் முருகையன், உடுமலைக்கும், திருப்பூர் குற்ற ஆவணங்கள் காப்பக இன்ஸ்பெக்டர் லட்சுணமன் பெரியநாயக்கன்பாளையத்துக்கும், ஆலாந்துறை இன்ஸ்பெக்டர் பெரியய்யா அவிநாசிக்கும் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.வால்பாறை இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், காமநாயக்கன்பாளையத்துக்கும், அவிநாசி இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், ஊத்துக்குளிக்கும், கருத்தம்பட்டி இன்ஸ்பெக்டர் பழனியப்பன் காங்கயத்துக்கும், திருப்பூர் எஸ்.பி., அலுவலக இன்ஸ்பெக்டர் ஹேமா, தாராபுரம் அனைத்து மகளிர் ஸ்டேஷனுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.அம்மாபேட்டை இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் திருப்பூர் குற்ற ஆவணங்கள் காப்பகத்துக்கும், மதுரை மாநகர இன்ஸ்பெக்டர் சக்திவேல் முருகன், அனுப்பர்பாளையம் குற்றப்பிரிவுக்கும், காமநாயக்கன்பாளையம் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவுக்கும், சூலூர் இன்ஸ்பெக்டர் பவுன்ராஜ், பல்லடம் குற்றப்பிரிவுக்கும், ஊட்டி நகர இன்ஸ்பெக்டர் நானாரவி தங்கதுரை மடத்துக்குளத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.