Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/இறந்ததாக கருதப்பட்ட பெண் உயிருடன் வந்தார்

இறந்ததாக கருதப்பட்ட பெண் உயிருடன் வந்தார்

இறந்ததாக கருதப்பட்ட பெண் உயிருடன் வந்தார்

இறந்ததாக கருதப்பட்ட பெண் உயிருடன் வந்தார்

ADDED : செப் 10, 2011 01:28 AM


Google News

சிவகங்கை :சிவகங்கையில் இறந்ததாக கருதப்பட்ட பெண் உயிருடன் மீட்கப்பட்டார்.

சிவகங்கை அருகே சக்கந்தியை சேர்ந்த லட்சுமணன் மனைவி காளீஸ்வரி, 20. லட்சுமணன் வெளிநாட்டில் உள்ளார். காளீஸ்வரியை ஆக., 18 முதல் காணவில்லை. உறவினர்கள் புகாரின்படி, இன்ஸ்பெக்டர் சங்கர் விசாரித்தார். ஆக., 30 ல், மதுரை மாவட்டம் கீழவளவு

சிறுவானை கண்மாயில், எரிக்கப்பட்ட நிலையில் பெண் இறந்து கிடப்பதாக, சிவகங்கை போலீசாருக்கு தகவல் வந்தது. உறவினர்கள் பார்த்த பின், எரிந்த நிலையில் கிடப்பது

காளீஸ்வரி என, உறுதி செய்தனர். உடல் அடக்கம் செய்யப்பட்டது.மீண்டு வந்தார்: இவ்வழக்கு விசாரணையில் காளீஸ்வரி பயன்படுத்திய மொபைல் போன் ஆய்வு செய்யப்பட்டது. இதில், வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து அவர் பேசியதும், உயிருடன் இருப்பதும் தெரிந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வாணியம்பாடி சென்றதாக கூறினார். நேற்று, அவர் கணவருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us