ADDED : ஜூலை 14, 2011 11:44 PM
சிவகங்கை : பிள்ளைவயல் காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
கவுன்சிலர் சரவணன் தலைமை வகித்தார். பில்லப்பன், சுரேஷ், தவமணி முன்னிலை வகித்தனர். பெரிய மாடு போட்டிகளை முன்னாள் எம்.எல்.ஏ., ராஜசேகரனும்,சிறிய மாட்டு வண்டி பந்தயத்தை நகராட்சி தலைவர் நாகராஜனும் துவக்கி வைத்தனர். காளையார்கோயில் ஒன்றிய தலைவர் சத்தியநாதன் பங்கேற்றனர், இரவு 9 மணிக்கு கலை நிகழ்ச்சி நடந்தது.