அமைச்சருக்கு எம்.ஜி.ஆர்., படம் பாட்டு எடுத்துக் கொடுத்த முதல்வர்
அமைச்சருக்கு எம்.ஜி.ஆர்., படம் பாட்டு எடுத்துக் கொடுத்த முதல்வர்
அமைச்சருக்கு எம்.ஜி.ஆர்., படம் பாட்டு எடுத்துக் கொடுத்த முதல்வர்
ADDED : செப் 14, 2011 01:18 AM
சென்னை :சட்டசபையில், நேற்று, சுகாதாரத்துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்திற்கு அமைச்சர் விஜய் பதிலளித்து பேசும்போது, 'தி.மு.க., ஆட்சியில் ஒரே நாளில் ஐந்து மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டனர்.
இந்த மாதிரியான அறிவிப்புக்கு எம்.ஜி.ஆர்., பாட்டு தான் ஞாபகத்திற்கு வருகிறது' என, கூறியவாறு அந்த பாட்டை பாட முயன்றார். ஆனால், அந்த பாடலின் வரிகள் அவருக்கு உடனடியாக வரவில்லை.முதல்வர் ஜெயலலிதா எழுந்து, 'எம்.ஜி.ஆர்., நடித்த, 'பெரிய இடத்து பெண்' படத்தில் அந்தப்பாட்டு வரும். 'அவனுக்கென்ன தூங்கி விட்டான், அகப்பட்டவன் நான் அல்லவோ' என்ற வரிகள் கொண்டது அப்பாடல்' என்றார்.உடனே அமைச்சர் விஜய், 'முதல்வருக்கு நன்றி. அவனுக்கென்ன அறிவித்து விட்டான். அகப்பட்டவன் நான் அல்லவோ' என்றார். உடனே சபையில் சிரிப்பொலி எழுந்தது.