Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம்

தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம்

தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம்

தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம்

ADDED : செப் 23, 2011 11:49 PM


Google News
Latest Tamil News

புதுடில்லி:'தற்கொலை முயற்சி குற்றமல்ல' என்ற வகையில், சட்டத் திருத்தம் கொண்டு வர, 25 மாநிலங்கள் ஒப்புதல் அளித்துள்ளன.

இருப்பினும் இது குறித்த சட்டத் திருத்தம் அமலாக, ஓராண்டுக்கு மேலாகும் என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பல்வேறு கஷ்டங்கள் காரணமாக, தற்கொலைக்கு முயற்சிப்பவரை கைது செய்து, சிறையில் அடைப்பது, அவருக்கு மேலும் ஒரு துன்பத்தை கொடுப்பதாக தான் அமையும், எனவே, 'தற்கொலைக்கு முயற்சிப்பதை குற்றமாக கருதக்கூடாது' என, சட்டக் கமிஷன் 2008ல் பரிந்துரை செய்திருந்தது.



சட்ட கமிஷனின் இந்த பரிந்துரை குறித்து, கருத்து தெரிவிக்கும்படி, அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியது. பீகார், மத்திய பிரதேசம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களை தவிர்த்து, மற்ற அனைத்து மாநிலங்களும், 'தற்கொலை முயற்சியை குற்றமாகக் கருதக்கூடாது' என, கருத்து தெரிவித்துள்ளன.



மனநல பாதுகாப்பு மையத்தை சேர்ந்த தன்னார்வலர், 'தற்கொலை முயற்சி குற்றம் என்ற சட்டத்தை நீக்க, அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது' எனக்கோரி, டில்லி ஐகோர்ட்டில் மனு செய்திருந்தார். இது குறித்து, விளக்கம் அளிக்கும் படி, ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்கு பதில் அளித்த நிலை குழு உறுப்பினர் ஜட்டன்சிங் என்பவர் குறிப்பிடுகையில், 'சட்ட கமிஷனின் பரிந்துரைக்கு, 25 மாநிலங்களும் ஒப்புதல் அளித்துள்ளன. இருப்பினும், தற்கொலை முயற்சி குற்றம் என்ற, 309வது பிரிவில் திருத்தம் செய்ய, ஓராண்டுக்கு மேலாகும்' என, தெரிவித்துள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us