Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/"அமெரிக்க விண்வெளி ஓடத்தில் கோவை மாணவன்'

"அமெரிக்க விண்வெளி ஓடத்தில் கோவை மாணவன்'

"அமெரிக்க விண்வெளி ஓடத்தில் கோவை மாணவன்'

"அமெரிக்க விண்வெளி ஓடத்தில் கோவை மாணவன்'

ADDED : ஆக 30, 2011 12:21 AM


Google News
கோவை : ஆர்.எஸ்., புரம், நேரு வித்யாலயா பள்ளி மாணவர், ஐந்து நாள் பயணமாக அமெரிக்க விண்வெளி ஓடம் சென்று வந்துள்ளார்.நேருவித்யாலயா பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர் வஜ்ரேஸ், அமெரிக்காவில் ஐந்து நாட்கள் பல்வேறு அறிவியல் நிகழ்வுகளை நிகழ்த்திடும் வாய்ப்பை அமெரிக்க விண்வெளி ஓடம் அவருக்கு வழங்கியது.சர்வதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மாணவர்கள் சில குழுக்களாக பிரிக்கப்பட்டனர்.

இக்குழுக்களில், அட்லஸ் குழுவின் தலைவராக வஜ்ரேஸ் செயல்பட்டார். இவர்கள் உருவாக்கிய, நிலவில் அமைக்க வேண்டிய கட்டட மாதிரி மிகச்சிறந்த வடிவமைப்பாக தேர்வு செய்யப்பட்டது. வானியல் வல்லுனர்கள் அணியும் நீல நிற ஆடையுடன் விண்வெளி ஓடத்தின் பயணிக்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டது. நாசாவை சேர்ந்த விண்வெளி வீரர் ஸ்டோரி முஸ்கிரேவ் வஜ்ரே பாராட்டி விண்வெளி சிறகினை பரிசளித்தார். பள்ளி முதல்வர் புனிதா, ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட அனைவரும் பாராட்டினர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us