/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பாரதியார் பல்கலை கிரிக்கெட் கலைமகள் கல்லூரி வெற்றிபாரதியார் பல்கலை கிரிக்கெட் கலைமகள் கல்லூரி வெற்றி
பாரதியார் பல்கலை கிரிக்கெட் கலைமகள் கல்லூரி வெற்றி
பாரதியார் பல்கலை கிரிக்கெட் கலைமகள் கல்லூரி வெற்றி
பாரதியார் பல்கலை கிரிக்கெட் கலைமகள் கல்லூரி வெற்றி
ADDED : செப் 18, 2011 09:45 PM
கோவை : பாரதியார் பல்கலை 'பி' மண்டல அனைத்து கல்லூரிகளுக்கான கிரிக்கெட்
போட்டியில் கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லூரி வெற்றி பெற்றது.
பாரதியார்
பல்கலை உடற்கல்வித்துறை சார்பில் 'பல்கலை கிரிக்கெட் சாம்பியன்ஷிப்'
கோப்பைக்கான 'பி' மண்டல அனைத்து கல்லூரிகளுக்கான கிரிக்கெட் போட்டி பல்கலை
மைதானத்தில் நடந்தது. முதல் போட்டியில், கோவை கலைமகள் கலை கல்லூரியும்,
நேரு ஆடை வடிவமைப்பு கல்லூரியும் மோதியதில் 84 ரன்கள் வித்தியாசத்தில் கோவை
கலைமகள் கல்லூரி வெற்றி பெற்றது. முதலில் 'பேட்' செய்த கோவை கலைமகள்
கல்லூரி, 20 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 199 ரன்கள் எடுத்தது. கோவை
கலைமகள் கல்லூரியின் பாலாஜி 87 ரன்கள், மனோஜ் 96 ரன்கள் எடுத்தனர். அடுத்து
'பேட்' செய்த நேரு ஆடை வடிவமைப்பு கல்லூரி, 20 ஓவர்களில் 8 விக்கெட்கள்
இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது. கல்லூரி செயலாளர்
சின்னராசு தலைமை வகித்தார். பல்கலை உடற்கல்வி இயக்குனர் போட்டியை
துவக்கினார். கல்லூரி முதல்வர் நடராஜன் வரவேற்றார். கல்லூரி ஆலோசகர்
முத்துராசு முன்னிலை வகித்தார். கல்லூரி உடற்கல்வி இயக்குனர் நந்தினி
நன்றிகூறினார்.