ADDED : ஜூலை 25, 2011 02:00 AM
ஆனைமலை : ஆனைமலை வேட்டைகாரன்புதூர் அரசு மருத்துவமனையில் கோவை மாவட்ட சுகாதார பணி இணை இயக்குனர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.ஆனைமலை அடுத்த வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவ மனைக்கு வேட்டைக்காரன்புதூர், ஒடையகுளம், செமணாம்பதி, சேத்துமடை, டாப்சிலிப், காளியாபுரம், ஆனைமலை மற்றும் சுற்றியுள்ள பகுதி மக்கள் சிகிச்சை பெற வருகின்றனர்.
இங்கு டாக்டர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும், பணி நேரத்திற்கு டாக்டர்கள் வந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கோவை மாவட்ட சுகாதார பணி இணை இயக்குனர் சுகுமாரன் நேற்று இந்த மருத்துவனைமயில் ஆய்வு நடத்தினார்.இதுகுறித்து அவர் கூறுகையில், 'மருத்துவமனையில் பிரச்னைகள் ஏதும் இல்லை. பொள்ளாச்சி மருத்துவமனைக்கு வந்ததால் வேட்டைக்காரன்புதூர் மருத்துவமனைக்கும் சென்றேன்' என்றார்.