ADDED : ஆக 07, 2011 02:53 AM
வாடிப்பட்டி:வாடிப்பட்டி அருகே சாணார்பட்டியை சேர்ந்த வையாபுரி மனைவி
ருக்மணி (58).
இவர், மண்புழுஉரம் தயாரிக்கிறார். நேற்று முன்தினம்
அடையாளம் தெரிந்த நான்கு பேர் மண்புழு உரம் வாங்க சென்றனர். ருக்மணியிடம்
பேச்சு கொடுத்து, அவரது முகத்தை துணியால் மூடி நகர விடாமல் செய்தனர். பின்
கழுத்தில் இருந்த மூன்று பவுன் செயினை பறித்து தப்பினர். வாடிப்பட்டி
போலீசார் விசாரிக்கின்றனர்.


