Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/உ.பி.யில் லாரி மோதி 4 குழந்தைகள் பலி

உ.பி.யில் லாரி மோதி 4 குழந்தைகள் பலி

உ.பி.யில் லாரி மோதி 4 குழந்தைகள் பலி

உ.பி.யில் லாரி மோதி 4 குழந்தைகள் பலி

UPDATED : செப் 15, 2011 01:02 PMADDED : செப் 15, 2011 09:48 AM


Google News
லக்னோ:உத்தரபிரதேசத்தில் சாலை‌யோரம் நடந்து சென்ற குழந்தைகள் மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் பலியாயினர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் நடத்திய சாலை மறியில் ‌கலவரம் ஏற்பட்டது. இதில் நடந்த துப்பாக்கி்ச்சூட்டில் இளைஞர் ஒருவர் பலியானார். உத்தரபிரதேச மாநிலம் கண்ணோஜ் மாவட்டத்தில் கண்ணோஜ்- பரூஹாபாத் ‌நெடுஞ்சாலையில் அதிகாலை 6.30 மணியளவில் சாலையோரம் 6 குழந்தைகள் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக அசுரவேகத்தில் வந்த லாரி இவர்கள் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி 4 ‌குழந்தைகள் (8 முதல் 14 வயதுவரை உள்ள) பலியாகியுள்ளனர். இருவர் காயமடைந்தனர். இதனை நேரில் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் திடீர் சாலைமறியில் ஏற்பட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது கலவரம் ஏற்பட்டது.சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார்-பொதுமக்களிடையே ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் விபின் என்ற 23 வயது வாலிபர் பலியானர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us