/உள்ளூர் செய்திகள்/சென்னை/அடகு கடையின் சுவற்றில் ஓட்டை போட்டு பணம் கொள்ளைஅடகு கடையின் சுவற்றில் ஓட்டை போட்டு பணம் கொள்ளை
அடகு கடையின் சுவற்றில் ஓட்டை போட்டு பணம் கொள்ளை
அடகு கடையின் சுவற்றில் ஓட்டை போட்டு பணம் கொள்ளை
அடகு கடையின் சுவற்றில் ஓட்டை போட்டு பணம் கொள்ளை
ADDED : அக் 03, 2011 04:07 AM
செங்குன்றம் : அடகுக் கடையின் சுவற்றில் ஓட்டை போட்டு, நகைகளை கொள்ளை அடிக்க முயற்சித்த மர்ம நபர்கள், பணத்தை மட்டும் எடுத்துச் சென்றனர்.
சென்னை, செங்குன்றம் ஆர்.ஜி.என்.காலனியை சேர்ந்தவர் ஹிம்தாராம். இவர், செங்குன்றம் அடுத்த வடகரை ஊராட்சி அலுவலகம் அருகில், கடந்த பல ஆண்டுகளாக அடகுக் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல் அடகு நகைகளை கடை, 'லாக்கரில்' வைத்துப் பூட்டினார். பின்னர் கடையை மூடிவிட்டு, வீட்டிற்குச் சென்றார். நேற்று காலை, வழக்கம் போல் கடை திறக்க வந்தார். அப்போது கடையின் ஷெட்டர் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தன. கிரில் கேட்டை திறந்து உள்ளே சென்று பார்த்த போது, கடையின் பின்புற சுவற்றில், ஒரு ஆள் உள்ளே நுழையும் அளவிற்கு ஓட்டை போடப்பட்டிருந்தது.
இது பற்றி அவர், செங்குன்றம் போலீசில் புகார் செய்தார். மாதவரம் துணை கமிஷனர் ராஜேந்திரன், உதவி கமிஷனர் கந்தசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். கடையின் முன்பக்க பூட்டை உடைத்த மர்ம நபர்கள், கிரில் கேட்டை திறக்க முடியாமல், பின்புற சுவற்றில் ஓட்டை போட்டு உள்ளே நுழைந்துள்ளனர். ஆனால், 'லாக்கரை' திறக்க முடியாததால், மேஜை டிராயரில் வைத்திருந்த 30 ஆயிரம் ரூபாய் பணத்தை மட்டும் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். இதனால், லாக்கரில் இருந்த 140 சவரன் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் தப்பின. செங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


